X
மோகினி

மோகினி

Thriller | 27 Jul 2018 | U/A | 148 Mins
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

மோகினி கதை

மோகினி இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில், த்ரிஷா நடிக்கும் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில், த்ரிஷாவுடன், ஜாங்கிரி மதுமிதா, சுவாமிநாதன், கணேஷ்கர் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.  கதை :  பல ஆண்டுகளாக பழிவாங்க துடித்துக்கொண்டிருக்கும் மோகினி, திரிஷாவின் உடலில் புகுந்து தனது லட்சியத்தை நிறைவேற்றும் பழைய பேய் கதை தான் இந்த மோகினி. 'ஷ்ஷப்பா... திரும்பவுமா' எனச் சொல்ல வைக்கும் வகையில் தமிழ் சினிமாவில் மீண்டும் அதே பழி வாங்கும் மற்றொரு பேய்க்கதையாக 'மோகினி'. பயத்தில் உறைய வைக்கும் என எதிர்பார்த்து தியேட்டருக்குப் போனால், இது தானே அடுத்து நடக்கப் போகிறது என கிச்சுகிச்சு மூட்டி கோபம் வரும்படி காமெடி செய்கிறது. சென்னையில் பிரபல கேக் நிபுணராக இருக்கும் திரிஷா, தோழியின் காதலுக்காக லண்டனுக்கு பறக்கிறார். அங்கு அவருக்கு காதலோடு, ஒரு பேயின் சகவாசமும் கிடைக்கிறது. திரிஷா மூலம் தன்னைக் கொன்றவர்களை பழி வாங்கத் துடிக்கிறது அந்த பேய். திரிஷா பேய் நினைத்ததை செய்து முடித்தாரா, அப்பேயின் பிளாஷ் பேக் என்ன என்பது தான் மோகினியின் கதைக்களம்.
Read More

மோகினி நடிகர்கள் & படக்குழுவினர்

மோகினி அணியின் தகவல்

இயக்குனர் மாதேஷ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

மோகினி விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
முதல் முறையாக இரண்டு வேடங்களில் திரிஷா. ஒவ்வொரு காட்சியிலும் தன் அழகு மற்றும் நடிப்பால் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார். நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. ஆனால், நடிப்பில் காட்டிய கவனத்தை, கதையைத் தேர்வு செய்ததிலும் கொஞ்சம் காட்டியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் நிச்சயம் இப்படம் அவர் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக இருந்திருக்கும். இதற்கு முன்பு வெளிவந்த நாயகி படம் படுதோல்வி அடைந்தும் கூட கதை தேர்வில் கவனம் காட்டாதது தான் திரிஷாவின் தவறு. மத்தபடி, இயக்குநர் சொன்னதை அப்படியே நடித்துக் கொடுத்திருக்கிறார். படம் முழுவதும் திரிஷாவின் நடிப்பே ஆக்கிரமிப்பதால், பாலிவுட்டில் இருந்து இப்படம் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ள ஜாக்கி நம் மனதில் பதியவில்லை. இது ஒரு ஹீரோயின் சென்ட்ரிக் படம் என்பதால், வழக்கமாக நடிகைகள் செய்யும் வேலையை ஜாக்கி இப்படத்தில் செய்திருக்கிறார். இரண்டு பாடலுக்கு திரிஷாவுடன் நடனம், கொஞ்சம் காட்சிகள், அவ்வளவுதான் ஜாக்கிக்கு படத்தில் வேலை. யோகிபாபுவிற்கு இருக்கும் கிரேஸை பயன்படுத்திக் கொள்வதாக நினைத்து, அவரை அதிகம் பேச வைத்து எரிச்சல் படுத்தியிருக்கிறார் இயக்குநர். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு பாஸ். இது ஒருபுறம் என்றால் லண்டன்வாசிகளாக மதுமிதா - கணேஷ்கரின் ஓவர் ஆக்டிங் 'வேண்டாம் மிடியல.. அழுதுருவேன்' என ரசிகர்களைக் கதற வைக்கிறது. ரூம் போட்டு யோசித்து தாறுமாறாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஆர்.மாதேஷ். ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே பழகி, அலுத்துப் போன பேய், மாந்திரீகம், காமெடி, காதல் என அதே பழைய கிண்ணத்தில் புதிய சட்னி. சத்தியமா நாங்க லண்டன்ல தான் ஷூட் பண்ணியிருக்கோம் என ரசிகர்களை நம்ப வைப்பதற்காக அடிக்கடி டாப் ஆங்கிளில் சுற்றிக் காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் குருதேவ்.

மோகினி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

மோகினி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+