என் மேல 13 ஆவியை ஏவி விட்டாங்க.. செத்து 20 வருஷமாகி இருக்கும்.. நடிகை சொன்ன திடுக்கிடும் தகவல்!
சென்னை: ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மோகினி. இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிப் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போதே, பரத் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவர், Touring Talkies யூடியூப் சேனலுக்கு பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.
அதில், நான் பல முன்னணி நடிகைகளுடன் நடித்து இருக்கிறேன். அதில், எனக்கு மிகவும் பிடித்தமான நடிகை ஸ்ரீவித்யா அம்மா. அவர்களுடைய வாழ்க்கை எனக்கு ஒரு பாடமாகவே அமைந்தது, எந்த முடிவு எடுத்தாலும் நிதானமாக யோசித்து எடுக்க வேண்டும் என்பதை நான் அவரிடத்தில் இருந்து தான் கற்றுக் கொண்டேன். ஏனென்றால் ஸ்ரீவித்யா அவர்கள், அவசரம் அவசரமாக ஒரு முடிவு செய்து, குடும்பத்தை எதிர்த்து ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு ரொம்ப கஷ்டப்பட்டார்கள். திருமணம் செய்தது நான் வாழ்க்கையில் செய்த பெரிய தவறு என்று சொல்வார்கள். இதனால், திருமண விஷயத்தில் நான் மிகவும் நிதானமாக முடிவு எடுத்தேன்.

நடிகை மோகினி: நான் 17 வயதிலேயே காதலிக்க ஆரம்பித்துவிட்டேன், கண்டதும் காதல் என்பார்களே அதுபோல்தான் அவரை பார்த்ததுமே காதலிக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால், வீட்டில் இது தெரிந்து பெரிய பிரச்சனை ஆகிவிட்டது. இருவருடைய குடும்பத்தினரும் எங்களுடைய காதலை ஏற்றுக் கொள்ளாததால், நாங்கள் இருவரும் பேசிய முடிவு செய்து பிரிந்துவிட்டோம். அதன் பிறகு தான் பரத்தை திருமணம் செய்து கொண்டேன். அவர் உண்மையில் என்னை மதிக்கக்கூடியவராக இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் நான் நானாகவே இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் அவர் தான்.
7 முறை தற்கொலை முயற்சி: எங்கள் இருவருக்குள் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. ஆனால், அவரின் குடும்பத்தில் இருக்கும் அவரின் உறவுக்கார பெண் ஒருவர் பில்லி, சூனியங்களை வைப்பவராக இருந்தார். பில்லி, சூனியத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், எனக்கு நடந்த சில விஷயங்களால் பில்லி சூனியங்கள் எல்லாம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். ஏன் என்றால், மன அழுத்தத்தில் இருந்தேன், 7 முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். என் வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை, அப்படி இருக்கும் போது நான் ஏன் சாக நினைத்தேன் என்று தெரியவில்லை. இதற்கு காரணம் கணவர் வீட்டில் இருப்பர் என்பதால், கணவரை விட்டு பிரிய நினைத்து, விவகாரத்து செய்ய முடிவு எடுத்தேன். அதன் பிறகு தான், ஒரு கட்டத்தில் தீமை ஒன்று இருந்தால், நன்மை என்று ஒன்று இருக்கும் என புரிந்து கொண்டு விவகாரத்து செய்யும் முடிவை கைவிட்டேன்.
13 ஆவிகள்: அந்த காலகட்டத்தில் என் கணவர் தான் எனக்கு துணையாக இருந்தார். ஒரு பாஸ்டரிடம் ஜெபம் செய்ய சென்ற போது தான், என் மீது 13 ஆவிகள் ஏவிட்டு இருப்பது தெரிவந்தது. அந்த 13 ஆவிகள் போல நான் வேறு வேறு மொழியில் பேசி இருக்கிறேன். அதன் பின், நான் அதில் இருந்து விடுபட்டேன். ஆண்டவராகிய ஏசு மட்டும் இல்லை என்றால், நான் இறந்து 20 வருடம் ஆகி இருக்கும். இந்த செய்வினையை செய்த பரத்தின் உறவுக்கார பெண்ணுக்கு என் கணவர் பரத்தை திருணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை. இதனால், நான் பரத்தை திருமணம் செய்ததில் இருந்து எனக்கு செய்வினை வைத்துக்கொண்டே இருந்து இருக்கிறார். ஆனால்,கடவுளின் அருளால் நான் அதில் இருந்து மீண்டுவிட்டேன் என்று நடிகை மோகினி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











