எனக்கு சூனியம் வெச்சாங்க... 7 முறை தற்கொலைக்கு முயன்றேன்.. நடிகை மோகினியின் பகீர் பேட்டி!

சென்னை: தமிழ் சினிமாவில் மிகக்குறைந்த வயதிலேயே கதாநாயகி ஆனார் நடிகை மோகினி. இயக்குனர் கே.ஆரால் ஈரமான ரோஜாவே படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். அண்மையில் Aval Vikatan யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.

அதில், எனக்கு திருமணமான பிறகு, குழந்தை, கணவர் என மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருந்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் நான் ஏதோ ஒரு விதமான மனஅழுத்தத்திற்கு ஆளாக்கப்படுவதை தெரிந்து கொண்டேன். ஏதோ ஒரு பிரச்சனை. யாரோ ஒருவரின் இழப்பு போன்றவற்றால் தான் மன அழுத்தம் ஏற்படும். ஆனால், எனக்கு அதுபோன்ற எதுவுமே இல்லாமல் மனஅழுத்தத்திற்குள் நான் சென்றேன். ஒரு கட்டத்தில் தற்கொலைக்கும் முயற்சி செய்தேன். ஒரு முறை அல்ல ஏழு முறை நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன். அப்போது, நான் ஒரு ஜோசியரை சந்தித்தேன், அவர் எனக்கு சூனியம் வைத்து இருப்பதாக சொன்னார். அதை கேட்டு முதலில் எனக்கு சிரிப்புதான் வந்தது.

mohini Interview
Photo Credit:

பில்லி சூனியம்: ஆனால், அவர் சொன்னதை நான் பல முறை யோசித்து பார்த்தேன். நான் ஒரு தைரியமான பெண், யார் முன்பும் எதற்காகவும் அழக்கூடியவள் இல்லை. அப்படி இருக்கும் நான், எப்படி மன அழுத்தத்திற்கு சென்றேன் என, என்னை பற்றியே நான் பல முறையோசித்து பார்த்தேன். தற்கொலைக்கு முயற்சி வர செல்ல வேண்டிய காரணம் என்ன என்று யோசித்தேன். நல்லது என்று ஒன்று இருந்தால், நிச்சயம் கேட்டது என்று ஒன்று இருக்கும் என்பதை நான் புரிந்து கொண்டேன். அதன் பிறகு தான், அதிலிருந்து வெளிப்படுவதற்கான முயற்சிகளை எடுத்தேன் அதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தது என்னுடைய ஜீசஸ்.

கடவுளை உணர்ந்தேன்: அதை நான் முழுமையாக உணர்ந்த பிறகு தான், பில்லி, சூனியம் என்பதெல்லாம் உண்மை என்பதை உணர ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் தான் பல உண்மைகளை நான் ஆழமாக புரிந்து கொண்டேன். கடவுள் என்பது நம் வாழ்க்கைக்கு மிகவும் தேவையான விஷயம் என்பதை அப்போது தான் என் மனம் உணர ஆரம்பித்தது. இன்று நான் உயிரோடு வாழ்கிறேன் என்றால் அதற்கு காரணம் கடவுள் ஜீசஸ் தான், என் கணவரை விவாகரத்து செய்யாமல், மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணமும் ஜீசஸ். இந்த பயணம் எப்போது வரை தொடரும் என்றால், கடவுள் நான் இந்த பூமியில் எப்போது வரை இருக்க வேண்டும் என நினைக்கிறாரோ அதுவரைக்கும் இந்த உலகத்தில் நான் இருப்பேன். இப்பொழுது என்னுடைய கடவுள், என்னுடைய மதம், என்னுடைய மனம் என அனைத்துமே மாறி இருக்கிறது என நடிகை மோகினி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X