விஜய்க்கு நோ.. பிரசாந்த் உடன் திருமணம்?.. நடிகை மோகினி மனம் திறந்த பேட்டி!

சென்னை: பிரபல நடிகை மோகினி ஒரு பேட்டியில், தான் விஜய்யுடன் நடிக்க மறுத்ததாகக் கூறியது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அந்தச் சம்பவம் குறித்து அவர் மனம் திறந்தபோது, பல திரை உலக ரகசியங்கள் வெளிவந்தன.

1990-களில் முன்னணி நடிகையாக இருந்த மோகினி, பிரசாந்த் உடன் கிசுகிசுக்கப்பட்டதையும், மூன்று முறை திருமண ஏற்பாடுகள் நின்றதையும் நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டார். "பிரசாந்த்தும் நானும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு சொன்னாங்க. நாங்க ரெண்டு பேருமே குழந்தைங்க மாதிரி இருந்தோம்," என்று அவர் கூறினார்.

Actress Mohini talks about marriage rumours with Prashanth

சின்னத்தம்பி படத்தில் நடிக்க முடியாமல் போனது குறித்து வருத்தப்பட்ட அவர், தனக்கு தமிழ் தெரியாது என்று கூறியதால், அந்த வாய்ப்பு நழுவியதாக தெரிவித்தார். "தமிழே தெரியாம எனக்கு தமிழ் வராதுன்னு சொன்னா, போடுப்பா அந்த பொண்ண சூப்பரா பேசுதுப்பா தமிழ்னு சொல்லிருவாங்க" என்று அந்த காலகட்டத்தை நினைவு கூர்ந்தார்.

விஜய் படத்தை மிஸ் பண்ண காரணம்: ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்க முடியாமல் போனதையும் அவர் ஒரு குறையாகக் கருதினார். "ரஜினி சார் கூட நடிக்க முடியலங்கிறது ஒரு குறை. விஜய் கூட நடிக்க முடியலங்கறது இன்னொரு குறை," என்று அவர் வெளிப்படையாக கூறினார்.

கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் ஷார்ட்ஸ் அணியும் காட்சியில் நடிக்க தயங்கியதால், அந்த வாய்ப்பை இழந்ததையும் மோகினி குறிப்பிட்டார். "நான் ஷார்ட்ஸ் போட மாட்டேன், எனக்கு பிடிக்காதுன்னு சொன்னேன். அதனால அந்த வாய்ப்பு சங்கவிக்கு போச்சு," என்றார் அவர்.

கிளாமர் ரோலில் நடித்ததால் வருத்தப்பட்டேன்: கண்மணி திரைப்படத்தில், தனது விருப்பத்துக்கு மாறாக கிளாமரான காட்சியில் நடித்தது குறித்து வருத்தம் தெரிவித்தார். அப்படத்தில், நீச்சல் உடையில் நடித்த அனுபவம் கசப்பானதாக இருந்ததாக கூறினார்.

மேலும், தனக்கு ஒரு விஷயம் கிடைக்க வேண்டுமென்றால், அதன் பின்னாடி தொங்க வேண்டிய அவசியம் இல்லை என்று மோகினி கூறினார். "நமக்குன்னு ஆண்டவர் வச்சாருனா, அது தானா வரும்," என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை.

தமிழ் சினிமாவில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது என்று கூறிய மோகினி, தனக்கு சினிமா பின்னணி இல்லாததால் எந்த அழுத்தமும் இல்லாமல் இருந்ததாக குறிப்பிட்டார். "படம் வந்தா பண்ணலாம். இல்லன்னா நான் திருப்பி படிக்கப் போறேன்," என்பது கொள்கையாக இருந்தது என்றார்.

பிரசாந்த் உடன் சண்டை: பிரசாந்துடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்ட மோகினி, இருவரும் நண்பர்களைப் போல் விளையாடியதாகவும், சண்டையிட்டதாகவும் கூறினார். "நாங்க பேசிக்கவே மாட்டோம். பாதி சமயம் பேசினா பாதி சண்டைதான் வரும்," என்று அந்த நட்பை விவரித்தார்.

சத்யராஜ் சாருடன் உடன் பிறப்பு படத்தில் நடித்தபோது, அவர் தன்னை கிண்டல் செய்ததையும் மோகினி நினைவு கூர்ந்தார். "சாமியார் வந்துருச்சா சாமியார் வந்துருச்சான்னு கேட்டுட்டே இருப்பாரு," என்று அவர் நகைச்சுவையாக கூறினார்.

கடைசியாக, தான் நடிக்கவில்லை என்று சிலர் நினைத்தாலும், உண்மையில் தனக்கு நடிப்பு மீது ஆர்வம் இருப்பதாகவும், சரியான வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் மோகினி தெரிவித்தார். கூடிய சீக்கிரமே மறுபடியும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க காத்திருப்பதாக மோகினி கூறிய நிலையில், ரசிகர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.

More from Filmibeat

Read more about: mohini tamil cinema
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X