மம்முட்டி தான் காரணம்.. அவரால் தான் அது நடந்தது.. நடிகை மோகினி!

சென்னை: தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட நடிகை மோகினி, ஈரமான ரோஜாவே திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழில் நாடோடி பாட்டுக்காரன், உனக்காக பிறந்தேன், உன்னை வாழ்த்தி பாடுகிறேன், சின்ன மருமகள், தாய்மொழி, உடன்பிறப்பு, புதிய மன்னர்கள், வனஜா கிரிஜா என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்த நடிகை மோகினி, 1999 ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். இந்த தம்பதிகளுக்கு ருத்ராஷ் மற்றும் அனிருத் என இரண்டு மகன்கள் இருக்கின்றன. இவர் 2006 ஆம் ஆண்டு கிறிஸ்துவ மதத்தால் ஈர்க்கப்பட்டு அந்த மதத்திற்கு மாறினார். அண்மையில் யூடியுப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் மோகினி, மலையாள சினிமாவில் மம்மூட்டியுடன் நடித்த அனுபவங்களை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

Mohini mammootty
Photo Credit:

நடிகை மோகினி: அதில், நான் மம்முட்டியுடன் முதல் படத்தில் நடித்த போது, என் அம்மா உங்களின் ரசிகை என்று சொன்னோன். அப்போது அவர் எதுவும் சொல்லவில்லை. ஆனால், நான் சொன்னதை அவர் மறக்காமல் நினைவில் வைத்துக்கொண்டு, பத்து வருடங்கள் கழித்து, உன்னுடைய அம்மா என் ரசிகை என்று சொன்றீயே, அப்போ நான், உங்க அம்மாவின் வயதுடைய ஹீரோவா என்று கேட்டார். அதைகேட்டு நான் பதறிப்போய், அய்யோ சார், நான் நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்றேன். மம்முட்டியுடன் பழகியவர்களுக்கு நன்றாக தெரியும் அவர் எப்போதுமே அனைவரிடத்திலும் ஜாலியாக ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார்.

மிகவும் நல்ல மனிதர்: முதலில் அவரிடம் பேசுவதற்கு எனக்கு பயமாகத்தான் இருந்தது, எனக்கு மலையாளம் தெரியாததால், யாரிடமும் பேசாமல், புத்தகத்தை படித்துக்கொண்டு அமைதியாக இருப்பேன். ஆனால், மம்முட்டி சார் வந்ததுமே, How are you mogini , என்று சொல்லிவிட்டு பேசஆரம்பித்துவிடுவார். நான் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருப்பேன். அப்போது, சீக்கிரம் நீ மலையாளம் கற்க வேண்டும் என்று சொல்லுவார்.

அவரால் கிடைத்த பெயர்: மம்மூட்டியுடன் பல படங்களில் இணைந்து நடித்து இருக்கிறேன். குறிப்பாக, "ஹரிகிருஷ்ணன்ஸ்", "யுத்யம்", "பூகாட்டன்" மற்றும் "அகலேயம்" போன்ற நடித்து இருக்கிறேன். இந்த படங்கள் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அவருடன் நான் நடித்த அனைத்து படங்களிலும் எனக்கு அதிக சம்பளம் கிடைக்கும்படி அவர் பார்த்துக்கொண்டார். மற்ற படங்களைவிட மம்மூட்டி சார் படங்களில் நடித்தால் எனக்கு இரட்டிப்பு சம்பளம் கிடைத்தது. சில இயக்குநர்கள் எனக்கு குறைந்த சம்பளம் வழங்க முயன்றபோது, மம்மூட்டி சார் தலையிட்டு, எனக்கு நியாயமான சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்தார் என்று மோகினி அந்த பேட்டியில் மம்முட்டி பற்றி பேசி உள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X