மான்ஸ்டர் கதை

  மான்ஸ்டர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி ஷங்கர், கருணாகரன் மற்றும் பலர் நடித்த நகைச்சுவை, காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரகாஷ்பாபு தயாரித்துள்ளார். 

  மேலும் இத்திரைப்படத்தினை எலியை மையமாக கொண்டு திரைக்கதை உருவாக்கியுள்ளார் இயக்குனர். இத்திரைப்படத்தில் கால்நடை மருத்துவர், எலி வளர்ப்பவர் போன்றவர்களை சந்தித்து அவர்கள் உதவியுடன் நிஜ எலிக்கு பயிற்சியளித்து திரைப்படத்தினை இயக்கியுள்ளார் இயக்குனர். இவர் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். மேலும் இப்படத்தின் நாயகனான எஸ் ஜே சூர்யாவின் முதல் "யு" சான்றிதழ் படமாகும்.

  கதை
  அஞ்சனம் அழகிய பிள்ளை (எஸ் ஜே சூர்யா) ஒரு தமிழ் நாடு மின்சார வாரிய ஊழியர் ஆவார். இவர் தஞ்சாவூரில் உள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு எளிமையான மனிதர், மிகவும் அமைதியான குணம் கொண்டு இவர், எவ்வீத உயிர்களுக்கும் தீங்கு நினைக்காத நல்ல உள்ளம் படைத்த நபர், இவருக்கு ஒரே நண்பராக இவர் பணியாற்றும் அலுவலகத்தில் கருணாகரன் உள்ளார். சென்னையில் பணியாற்றி வரும் இவருக்கு வெகுநாட்களாக இவரது பெற்றோர் இவர் திருமணத்திற்கு பெண் பார்த்து வருகிறார்கள்.

  இவர் ஒரு பெண் பார்க்க சொந்த ஊருக்கு செல்கிறார், அங்கு ஒரு ஏமாற்றத்துடன் சென்னைக்கு வருகிற இவர், சென்னையில் ஒரு புது வீடு ஒன்றிற்குள் குடிபெயர்கிறார். அங்குதான் இப்படத்தின் நாயகனான எலி வருகிறது. பின்னர் இவருக்கும் மேகலா (பிரியா பவானி ஷங்கர்) இருவருக்கும் காதல் மலர்கிறது.

  இவரின் ஜோடியான பிரியா பவானி ஷங்கர் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர், இவர் நகை கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார், இருவரும் திருமணத்திற்கு தயாராகிறார்கள். இதற்கிடையில் சூர்யாவின் வீட்டில் எலியின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது. கருணாகரனுடன் எலியின் அட்டகாசத்தை சமாளித்து கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு அதிர்ச்சி தரும் வகையில் பிரியா பவானி ஷங்கர் சந்தேகத்திற்கிடமான வைரத்தால் போலிஸில் சிக்குகிறார்.

  இதனை அறிந்த எஸ்.ஜே.சூர்யா எலியை சமாளித்தாரா? வைரம் எப்படி வந்தது? எலியின் பின்னடைவில் ஏதேனும் காரணம் உள்ளதா? என்பதே மான்ஸ்டர் படத்தின் கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie மான்ஸ்டர் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).