X
தமிழ் » திரைப்படங்கள் » மான்ஸ்டர்
மான்ஸ்டர்

மான்ஸ்டர்

Comedy | 17 May 2019 | U | 139 Mins
Tamil

2.6 /5 Users

3.5 /5 Filmibeat

மான்ஸ்டர் கதை

மான்ஸ்டர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி ஷங்கர், கருணாகரன் மற்றும் பலர் நடித்த நகைச்சுவை, காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரகாஷ்பாபு தயாரித்துள்ளார்.  மேலும் இத்திரைப்படத்தினை எலியை மையமாக கொண்டு திரைக்கதை உருவாக்கியுள்ளார் இயக்குனர். இத்திரைப்படத்தில் கால்நடை மருத்துவர், எலி வளர்ப்பவர் போன்றவர்களை சந்தித்து அவர்கள் உதவியுடன் நிஜ எலிக்கு பயிற்சியளித்து திரைப்படத்தினை  இயக் கியுள்ளார் இயக்குனர். இவர் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். மேலும் இப்படத்தின் நாயகனான எஸ் ஜே சூர்யாவின் முதல் "யு" சான்றிதழ் படமாகும். கதை அஞ்சனம் அழகிய பிள்ளை (எஸ் ஜே சூர்யா) ஒரு தமிழ் நாடு மின்சார வாரிய ஊழியர் ஆவார். இவர் தஞ்சாவூரில் உள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு எளிமையான மனிதர், மிகவும் அமைதியான குணம் கொண்டு இவர், எவ்வீத உயிர்களுக்கும் தீங்கு நினைக்காத நல்ல உள்ளம் படைத்த நபர், இவருக்கு ஒரே நண்பராக இவர் பணியாற்றும் அலுவலகத்தில் கருணாகரன் உள்ளார். சென்னையில் பணியாற்றி வரும் இவருக்கு வெகுநாட்களாக இவரது பெற்றோர் இவர் திருமணத்திற்கு பெண் பார்த்து வருகிறார்கள். இவர் ஒரு பெண் பார்க்க சொந்த ஊருக்கு செல்கிறார், அங்கு ஒரு ஏமாற்றத்துடன் சென்னைக்கு வருகிற இவர், சென்னையில் ஒரு புது வீடு ஒன்றிற்குள் குடிபெயர்கிறார். அங்குதான் இப்படத்தின் நாயகனான எலி வருகிறது. பின்னர் இவருக்கும் மேகலா (பிரியா பவானி ஷங்கர்) இருவருக்கும் காதல் மலர்கிறது. இவரின் ஜோடியான பிரியா பவானி ஷங்கர் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர், இவர் நகை கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார், இருவரும் திருமணத்திற்கு தயாராகிறார்கள். இதற்கிடையில் சூர்யாவின் வீட்டில் எலியின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது. கருணாகரனுடன் எலியின் அட்டகாசத்தை சமாளித்து கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு அதிர்ச்சி தரும் வகையில் பிரியா பவானி ஷங்கர் சந்தேகத்திற்கிடமான வைரத்தால் போலிஸில் சிக்குகிறார். இதனை அறிந்த எஸ்.ஜே.சூர்யா எலியை சமாளித்தாரா? வைரம் எப்படி வந்தது? எலியின் பின்னடைவில் ஏதேனும் காரணம் உள்ளதா? என்பதே மான்ஸ்டர் படத்தின் கதை.
Read More

மான்ஸ்டர் நடிகர்கள் & படக்குழுவினர்

மான்ஸ்டர் அணியின் தகவல்

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஜஸ்டின் பிரபாகரன்
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

மான்ஸ்டர் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
ஒரு எலியை மைய கதாபாத்திரமாக வைத்துக்கொண்டு, அதையொட்டி ஒரு நல்ல கதையை பின்னி, அதற்கு ஏற்றார் போல் கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன். இதனால் படத்தின் மீது நம்பகத்தன்மை உருவாகிறது. லாஜிக் மீறல்கள் இருந்தாலும், குழந்தைகள் ரசித்து பார்க்கும் வகையில் படத்தை தந்திருக்கிறார் இயக்குனர். எலி சம்மந்தப்பட்ட காட்சிகள் மிகவும் தத்ரூபமாக இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் கிராபிக்ஸ் அதிகம் இல்லாமல், நிஜமான எலியை வைத்து எடுத்திருப்பது. ஒரு எலியை வைத்துக்கூட நல்ல படத்தை தர முடியும் என நிரூபித்திருக்கிறார் நெல்சன். இவரை விட்டால் வேறு யாராலும் எலி அளவுக்கு இறங்கி நடிக்க முடியாது. ஆமாங்க தமிழ் சினிமா ஜிம் கேரி எஸ்.ஜே.சூர்யாவை தவிர வேறு யாராலும் இந்த கதாபாத்திரத்தை இவ்வளவு அருமையாக செய்திருக்க முடியாது. எஸ்.சூர்யாவின் நடிப்பு வாழ்க்கையில் மான்ஸ்டர் ஒரு முக்கியமான படம்.

மான்ஸ்டர் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • hi.. i have saw the sarvam movie today, it's really superb.... it's an visual treat for all .. dont miss it .. first half is loveable scenes 2nd half is very interesting with powerfull actions..

×
2.6 /5 Your Rating

மான்ஸ்டர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+