twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை...? உண்மையை போட்டுடைத்த மம்முட்டி பட நடிகை!

    |

    திருவனந்தபுரம்: தமிழில் கோரிப்பாளையம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சுவாசிகா.
    மைதானம், அப்புச்சி கிராமம், சோக்காளி உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ள சுவாசிகா, மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
    இந்நிலையில், மலையாளத் திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை குறித்த புகார்கள் பற்றி சுவாசிகா உண்மையை போட்டு உடைத்துள்ளார்.

    ’மஞ்சள் வண்ண லாரியின் மகத்தான் சரித்திரம்’..டிச-9 -ல் வெளியாகும் 'விஜயானந்த்’பான் இந்தியா திரைப்படம்’மஞ்சள் வண்ண லாரியின் மகத்தான் சரித்திரம்’..டிச-9 -ல் வெளியாகும் 'விஜயானந்த்’பான் இந்தியா திரைப்படம்

     கோலிவுட் டூ மல்லுவுட்

    கோலிவுட் டூ மல்லுவுட்

    தமிழில் கோரிப்பாளையம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சுவாசிகா. சின்ன திரையில் இருந்து சினிமாவில் அடியெடுத்து வைத்த சுவாசிகா, தொடர்ந்து மைதானம், சோக்காளி, அப்புச்சி கிராமம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத சுவாசிகா தற்போது மலையாளத்தில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். மம்முட்டியுடன் சிபிஐ 5ம் பாகம், மோகன்லாலுடன் மான்ஸ்டர் போன்ற படங்களிலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் சுவாசிகா.

    நடிகைகளுக்கு பாதுகாப்பு சங்கம்

    நடிகைகளுக்கு பாதுகாப்பு சங்கம்

    இந்நிலையில், மலையாள திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து முன்னணி ஹீரோயின்கள் முதல் இளம் நடிகைகளும் அடிக்கடி புகார்கள் கூறி வந்தனர். மேலும், மலையாள பட உலகில் பாலியல் தொல்லைகள் இருப்பதாகவும், படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால், படுக்கைக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து இந்த தொல்லைகளில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க, பாதுகாப்பு சங்கம் தொடங்கப்பட்டது.

     விளாசித் தள்ளிய சுவாசிகா

    விளாசித் தள்ளிய சுவாசிகா

    மலையாள நடிகைகள் ரம்யா நம்பீசன், ரேவதி, பார்வதி உள்ளிட்டோர் இணைந்து இந்த பாதுகாப்பு சங்கத்தை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள சுவாசிகா, "மலையாள திரையுலகம் பெண்களுக்கு பாதுகாப்பானதாக தான் இருக்கிறது. இங்கு பெண்களை யாரும் படுக்கைக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்துவது கிடையாது. பெண்களுக்கு விருப்பம் இல்லையென்றால் தைரியமாக மறுப்பு தெரிவிக்கலாம். அதன்பின் யாரும் வற்புறுத்த முடியாது" எனக் கூறியுள்ளார்.

     நீங்கள் தான் காரணம்

    நீங்கள் தான் காரணம்

    தொடர்ந்து பேசிய சுவாசிகா, "இரவு யாராவது உங்கள் ரூம் கதவை தட்டினால் நீங்கள் திறக்கக் கூடாது. கதவு திறக்காமல் உங்கள் ரூம் உள்ளே யாரும் வர முடியாது. அதையும் மீறி ஏதேனும் மோசமான அனுபவம் நேர்ந்தால் போலீஸ் நிலையத்துக்கோ அல்லது மகளிர் ஆணையத்திலோ புகார் செய்யலாம். சினிமா பெண்கள் நல அமைப்பில் புகார் செய்ய தேவை இல்லை. அந்த அமைப்பின் மூலம் நீதி கிடைக்கும் என்ற உறுதி இல்லை" என கடுமையாக பேசியுள்ளார். சுவாசிகாவின் இந்த பேட்டி மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Actresses Ramya Nambisan, Revathi, Parvathy and others started the Women's Protection Society in Malayalam Film Industry. Commenting on this, actress Swasika said that Malayalam film industry is safe for women.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X