Don't Miss!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Exclusive: கதை திருட்டு பிரச்சினையில் சிக்கிய எஸ்.ஜே.சூர்யா படம்.. ‘குளுவான்’ தான் மான்ஸ்டர்- ஆ?
Recommended Video
சென்னை: மான்ஸ்டர் திரைப்படத்தின் கதை தன்னுடைய சிறுகதையில் இருந்து திருடப்பட்டுள்ளது என எழுத்தாளர் லதானந்த் தெரிவித்துள்ளார்.
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்கே சூர்யா - பிரியா பவானிசங்கர், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிலீசான படம் மான்ஸ்டர். எலி தொல்லையை மையமாக வைத்து வெளிவந்த இந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டு வாரங்களைத் தொடர்ந்தும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்நிலையில் இப்படமும் கதை திருட்டு பிரச்சினையில் சிக்கியிருக்கிறது. தனது குளுவான் சிறுகதையைத் தான் நெல்சன் மான்ஸ்டர் என்ற பெயரில் படமாக்கியிருப்பதாக லதானந்த் என்ற எழுத்தாளர் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒன் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

எழுத்தாளர்:
நான் ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர். சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் விமர்சனம் எழுதுவது எனக்குப் பிடித்தமான விசயம். பிரபல இதழ்களில் என்னுடைய சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன.
படத்த கூர்ந்து கவனிச்சா ‘அந்த' ரகசியம் தெரியும்.. என்.ஜி.கே. பற்றி செல்வராகவன் டிவீட்!

குளுவான் சிறுகதை:
சமீபத்தில் வெளியான மான்ஸ்டர் படம்கூட என்னுடைய குளுவான் என்ற சிறுகதை தான். கடந்த 2017ம் ஆண்டு அந்த சிறுகதை கல்கி இதழில் பிரசுரமாகி இருந்தது. அது என் கதை போல் இருக்கிறதே என மான்ஸ்டர் படத்தின் டிரெய்லரைப் பார்த்தபோதே எனக்கு சந்தேகம் வந்தது.

கதை திருட்டு:
ஆனால் படம் வெளியானதும் அது உறுதியாகி விட்டது. எலியால் ஒரு குடும்பம் படும் அவஸ்தைகள் தான் என் சிறுகதையின் சாராம்சமும். மான்ஸ்டர் படத்தில் வரும் பல காட்சிகள் அப்படியே என் சிறுகதையில் உள்ளது.

சட்டப்படி தீர்வு:
இது தொடர்பாக படக்குழுவை அணுகினேன். ஆனால், படம் ஏற்கனவே ரிலீசாகி விட்டதால் என்னால் இனி என்ன செய்ய முடியும் என அலட்சியப் படுத்துகின்றனர். ஆனால், நான் இந்த விவகாரத்தை இப்படியே விட மாட்டேன். சட்டப்படி இதற்கு தீர்வு காண்பேன்.

ஆலோசனை:
ஒன்று படத்தில் கதை என்னுடையது எனப் பெயர் வர வேண்டும். இல்லையென்றால், படத்தின் லாபத்தில் எனக்கும் ஒரு பங்கு தர வேண்டும். இதை வலியுறுத்தி மான்ஸ்டர் படக்குழு மீது வழக்கு தொடருவேன். இது பற்றி வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன்' எனத் தெரிவித்துள்ளார் லதானந்த்.