மான்ஸ்டர் ஜோடி எஸ்.ஜே.சூர்யா ப்ரியா பவானி சங்கர் மீண்டும் இணைகிறது

சென்னை: மான்ஸ்டர் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவும் ப்ரியா பவானி சங்கரும் புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த புதிய படத்தின் பூஜை தொடர்பான சில போட்டோக்களை எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

மான்ஸ்டர் பட வெற்றிக்கு பிறகு மீண்டும் மற்றொரு புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர் எஸ்.ஜே.சூர்யாவும் ப்ரியா பவானி சங்கரும். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா 15 என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தை இயக்கப்வோவது இயக்குனர் ராதா மோகன். இவர் ஏற்கனவே பயணம், அபியும் நானும், மொழி போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர். இவர் கடைசியாக ஜோதிகாவை வைத்து காற்றின் மொழி என்கிற படத்தை இயக்கி இருந்தார்.

S.J.Surya and Priya Bhavani Shankar Acts in New Film

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான மான்ஸ்டர் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருந்தனர். அது வரை பார்க்காத எஸ்.ஜே.சூர்யாவை நாம் மான்ஸ்டர் படத்தில் பார்த்திருந்தோம்.

மெர்சல் மற்றும் ஸ்பைடர் படங்களில் மிரட்டலான வில்லன் தோற்றத்தில் வந்து கலக்கிய எஸ்.ஜே.சூர்யாவை, மான்ஸ்டர் படத்தில் முற்றிலும் மாறுபட்ட காமெடியான கதாபாத்திரத்தில் பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

நெல்சன் வெங்கடேசன், மான்ஸ்டர் படத்தை அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும் படியாக கலகலப்பாக உருவாக்கியிருந்தார். குறிப்பாக சிறுவர்கள் அனைவரும் ரசித்து பார்த்தனர். இதனால் யாரும் எதிர்பாராத வெற்றியை இப்படம் கொடுத்தது.

S.J.Surya and Priya Bhavani Shankar Acts in New Film

மான்ஸ்டர் படத்தைத் தொடர்ந்து பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர். இதற்கு பின் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கவுதம் மேனன் தயாரிப்பில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியாகும் என எதிர்பார்த்தோம். ஆனால் வழக்கம் போல் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.

தற்போது ஏஞ்சல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இந்த புதிய படமானது துவங்கியுள்ளது. இந்த படத்தின் சில பூஜை போட்டோக்களை எஸ்.ஜே.சூர்யா ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார்

இதற்கு ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் இயக்குனர் முருகதாஸ். முருகதாஸ் தற்போது ரஜினியின் தர்பார் படத்தில் பிஸியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் 2020 காதலர் தினத்தில் வெளியாகுமென படத்தின் இயக்குனர் ராதா மோகன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X