மோசடி இயக்குனர் கே ஜெகதீசன் இயக்கத்தில் விஜூ, பல்லவி டோரா, அஜெய்குமார் , விஜயன், வெங்கடாச்சலம், நீனு சுகுமாரன் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பு நிறுவனமான ஜே சி எஸ் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஷாஜகான் இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் மற்றும் படத்தொகுப்பாளர் சுப்பு இணைந்து தொழிநுட்ப பணியாற்றியுள்ளனர்.
கதை
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நடந்த ஏமாற்று வேலைகளை கண்முன்னே காட்சிப்படுத்துகிறது மோசடி திரைப்படம்.
நாயகன் விஜுவும் அவரது நண்பர்களும் சேர்ந்து, சதுரங்க வேட்டை பாணியில் பல மோசடிகளை செய்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். அவர்களுடைய இலக்கு நூறு கோடி ரூபாய். கருப்பு வைரம், நவரத்தின புதையல் என மோசடி செய்து இலக்கை அடைய முயற்சிக்கிறார்கள்.
சதுரங்க வேட்டையில் சொல்லத் தவறிய சில பித்தலாட்டங்களை மோசடியில் பார்க்கலாம். வீட்டு தோட்டத்தில் புதையல் இருப்பதாக நம்பவைத்து ஹவுஸ் ஓனரை ஏமாற்றுவது, பூனைக்கு கருப்பு சாயம் பூசி கருப்பு வைரம் என டகால்டி செய்வது, நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி பல லட்சங்களை அபேஸ் செய்வது என வித்தியாசமான மோசடிகளை பற்றி பாடம் நடத்துகிறது படம்.
ஒருகட்டத்தில் போலீசிடம் சிக்கிக்கொள்கிறார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நாயகன் விஜுவுக்கு ஏற்பட்ட பெரிய பிரச்சினையே, அவரை மோசடி செய்யும் நிலைக்கு தள்ளுகிறது. இந்த சிக்கலில் இருந்து விஜு எப்படி வெளியே வருகிறார் என்பது தான் மீதிக்கதை.