X
மோசடி

மோசடி

Drama | Thriller | 21 Jun 2019 | U | 129 Mins
Tamil

2.5 /5 Users

1.5 /5 Filmibeat

மோசடி கதை

மோசடி இயக்குனர் கே ஜெகதீசன் இயக்கத்தில் விஜூ, பல்லவி டோரா, அஜெய்குமார் , விஜயன், வெங்கடாச்சலம், நீனு சுகுமாரன் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பு நிறுவனமான ஜே சி எஸ் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஷாஜகான் இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் மற்றும் படத்தொகுப்பாளர் சுப்பு இணைந்து தொழிநுட்ப பணியாற்றியுள்ளனர். கதை பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நடந்த ஏமாற்று வேலைகளை கண்முன்னே காட்சிப்படுத்துகிறது மோசடி திரைப்படம். நாயகன் விஜுவும் அவரது நண்பர்களும் சேர்ந்து, சதுரங்க வேட்டை பாணியில் பல மோசடிகளை செய்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். அவர்களுடைய இலக்கு நூறு கோடி ரூபாய். கருப்பு வைரம், நவரத்தின புதையல் என மோசடி செய்து இலக்கை அடைய முயற்சிக்கிறார்கள்.  சதுரங்க வேட்டையில் சொல்லத் தவறிய சில பித்தலாட்டங்களை மோசடியில் பார்க்கலாம். வீட்டு தோட்டத்தில் புதையல் இருப்பதாக நம்பவைத்து ஹவுஸ் ஓனரை ஏமாற்றுவது, பூனைக்கு கருப்பு சாயம் பூசி கருப்பு வைரம் என டகால்டி செய்வது, நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி பல லட்சங்களை அபேஸ் செய்வது என வித்தியாசமான மோசடிகளை பற்றி பாடம் நடத்துகிறது படம். ஒருகட்டத்தில் போலீசிடம் சிக்கிக்கொள்கிறார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நாயகன் விஜுவுக்கு ஏற்பட்ட பெரிய பிரச்சினையே, அவரை மோசடி செய்யும் நிலைக்கு தள்ளுகிறது. இந்த சிக்கலில் இருந்து விஜு எப்படி வெளியே வருகிறார் என்பது தான் மீதிக்கதை.
Read More

மோசடி நடிகர்கள் & படக்குழுவினர்

மோசடி அணியின் தகவல்

இயக்குனர் கே ஜெகதீசன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

மோசடி விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
முதிர்ச்சி இல்லாத நடிகர்களின் நடிப்பு, படத்தை போரடிக்க வைக்கிறது. அதுவும் அவர்கள் பேசும் தமிழ், வேற்று மாநிலத்தவர்கள் பேசுவது போலவே காதில் விழுகிறது. டப்பிங்கிலாவது அதனை சரி செய்திருக்கலாம். நாயகன் விஜு, நாயகி பல்லவி டோரா உள்பட படத்தில் நடித்த அனைவருமே புதுமுகங்கள். அதனால் நடிப்பு பயிற்சி போதவில்லை. எல்லாக் காட்சிக்கும் ஒரே ரியாக்ஷன் தான். ஷாஜகானின் இசையில் ஒரு குத்து பாட்டு மட்டும் தாளம் போட வைக்கிறது. மணிகண்டனின் ஒளிப்பதிவு படத்தை ஓரளவுக்கு காப்பாற்றுகிறது. கோபிநாத்தின் எடிட்டிங்கில் குறை எதும் இல்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான படமாக முதலில் செல்கிறது மோசடி. ஆனால் கடைசியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்துவிடுகிறது படம். ரூபாய் தாள்களை ஒழித்து, இ-கரன்சியை நாடு முழுவதும் கொண்டு வந்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்கிறது மோசடி. குறைந்த பட்ஜெட்டில் நல்ல கருத்துள்ள படத்தை தர நினைத்திருக்கிறார் இயக்குனர் ஜெகதீசன். நல்ல நடிகர்களை வைத்து அதனை செய்திருந்தால், 'மோசடி' மோசம் செய்திருக்காது.

மோசடி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

மோசடி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+