twitter

    Mr.லோக்கல் கதை

    Mr.லோக்கல் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தனது ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் வாயிலாக தயாரிக்க, இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா இசைக்குழு இசையமைத்துள்ளது.

    இத்திரைப்படமானது மே 1ல் வெளிவரவிருந்த நிலையில் சில நிதி மற்றும் தயாரிப்பு நிறுவன காரணங்களால் மே 17ல் இத்திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் 2019 ஏப்ரல் 19ல் இணையத்தளத்தில் தகவல்களை கூறியதை தொடர்ந்து, தற்போது மே 17-ல் இப்படமானது வெளிவந்துள்ளது.

    கதைக்கரு
    நண்பர்களுடன் ஜாலியாக சுற்றித்திரியும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த லோக்கலான வாலிபர், பல கோடி சொத்துக்கு சொந்தக்காரியான திமிரு பிடித்த மாடர்ன் பெண்ணை காதலில் விழவைக்கிறார், இக்கதையினை மையமாக கொண்டு நகைச்சுவை மற்றும் அதிரடி பாணியில் திரைப்படம் உருவாகியுள்ளது.

    கதை
    சிவகார்த்திகேயன் ஒரு தனியார் கார் நிறுவன ஷோரூமில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரின் அம்மாவான ராதிகா சரத்குமார் ஒரு சீரியல் ரசிகை, இவர் ஒரு சீரியல் நடிகையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பம் கொள்கிறார், இதனால் அம்மாவை அழைத்துக்கொண்டு அந்த சீரியல் நடிகையை சந்திக்க செல்கிறார் சிவா.

    அப்போது எதிர்பாராதவிதமாக இவர்களை காரில் இடித்து விடுகிறார் நயன்தாரா, இவர் சிவா பார்க்க வந்த நடிகையின் சீரியல் தயாரிப்பாளர் ஆவார், அந்த நொடியில் இருந்து இருவர்களுக்குமே மோதல் தொடங்கியது. லோக்கல்களை கண்டாலே பிடிக்காத நயன்தாராவை நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர், எவ்வாறு காதலில் விழவைக்கிறார் என்பதே படத்தின் கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie Mr.லோக்கல் with us? Please send it to us ([email protected]).