twitter
    Tamil»Movies»Mr. Local
    Mr.லோக்கல்

    Mr.லோக்கல்

    U | 2 hrs 34 mins | Comedy
    Release Date : 17 May 2019
    2.5/5
    Critics Rating
    3/5
    Audience Review
    Mr.லோக்கல் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தனது ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் வாயிலாக தயாரிக்க, இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா இசைக்குழு இசையமைத்துள்ளது.

    இத்திரைப்படமானது மே 1ல் வெளிவரவிருந்த நிலையில் சில நிதி மற்றும் தயாரிப்பு நிறுவன காரணங்களால் மே 17ல் இத்திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் 2019 ஏப்ரல் 19ல் இணையத்தளத்தில் தகவல்களை கூறியதை தொடர்ந்து, தற்போது மே 17-ல்...
    • எம் ராஜேஷ்
      எம் ராஜேஷ்
      Director
    • கே இ ஞானவேல் ராஜா
      கே இ ஞானவேல் ராஜா
      Producer
    • ஹிப்ஹாப் தமிழா
      ஹிப்ஹாப் தமிழா
      Music Director/Lyricst/Singer
    • மிர்ச்சி விஜய்
      மிர்ச்சி விஜய்
      Lyricst
    • ரோகேஷ்
      Lyricst
    Music Director: ஹிப்ஹாப் தமிழா
    • டக்குனு டக்குனு
      2.9
    • கலக்கலு மிஸ்டர் லோக்கலு
      4.3
    • மீனாமினிக்கி
      Lyricist: ரோகேஷ்
      RATE NOW
    • மிஸ்டர் லோக்கல் தீம்
      RATE NOW
    • நீ நெனெச்சா
      RATE NOW
    • பில்மிபீட்
      2.5/5
      பணக்கார திமிர்ப்பிடித்த பெண் - மிடில் கிளாஸ் பையன் காதலை மையமாக வைத்து, ஈரமான ரோஜாவே, மன்னன், சிங்காரவேலன், எங்கிட்ட மோதாதே, அம்மன் கோயில் கிழக்காலே உள்பட நிறைய சூப்பர் ஹிட் படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. வந்துகொண்டும் தான் இருக்கின்றன. ஆனால் மேலே குறிப்பிட்ட படங்களில் உணர்வுப்பூர்வமான கதையும், காட்சிகளும் இருக்கும். இதில் அப்படி எந்த காட்சியும் இல்லாதது படத்தின் மிகப்பெரிய மைனஸ். இதனாலேயே படத்துடன் ரசிகர்களால் ஒட்ட முடியவில்லை.

      "அடுத்து சண்டை வரப்போகுது, இப்போ பாட்டு வரப்போகுது பாரேன்" என சிறுவர்கள் கூட எளிதாக ஊகிக்கும் திரைக்கதை படத்தின் மிகப்பெரிய தோல்வி. எம்.ராஜேஷ் படம் பார்த்து விட்டு வயிறு வலிக்கச் சிரித்து விட்டு வரலாம் என நம்பி செல்பவர்கள், இந்தப் படத்துக்கு இவ்வளவு காசு கொடுத்து டிக்கெட் எடுத்து விட்டோமே என வயிற்றெரிச்சல் படும் அளவிற்கு இருக்கிறது படம்.

      படத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் காமெடிக்கு பேர் போனவர்கள். ஆனால், படம் காமெடியே இல்லாமல் அக்னி நட்சத்திர தமிழ்நாடு மாதிரி வறட்சியாக மண்டையைக் காய வைக்கிறது. யோகி பாபு ஒரு காட்சியில் சிவகார்த்திக்கேயனிடம் சொல்வார், 'இந்த மேட்ச் முடியறதுக்குள்ள நீ சிரிக்கற மாதிரி ஒரு காமெடி சொல்றேன் பாரு' என. நம் மைண்ட் வாய்ஸும் இதே போல் தான் படம் முடிவதற்குள் மற்றவர்களிடம் சொல்லிச் சிரிக்கும்படி ஒரு காமெடிக் காட்சியாவது வந்துவிடாதா என ஏங்க வைக்கிறது.