நானும் ரௌடி தான் இந்திய தமிழ் திரைப்படம் இப்படத்தினை விக்னேஷ் சிவா இயக்க விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்துள்ளனர். இப்படம் தனுசின் வண்டர் பார் பில்ம்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் ரவிசந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கதை :
பாண்டிச்சேரி போலீஸ் அதிகாரியான ராதிகா சரத்குமார் விஜய் சேதுபதியின் தாயாக வருகிறார். இவர் தன்னை ஒரு ரவுடியாக வெளியில் காட்டிகொள்வதற்காக சிறு சிறு பஞ்சாயத்துகளில் தலையிடுகின்றார். இந்நிலையில் நயன்தாராவை கண்டு காதல் வாய்ப்படுகின்றார். ஆனால், நயன்தாரா தன்னை காதலிக்க வேண்டும் என்றால் தன் தாய் தந்தையை கொன்ற பார்த்திபனை கொல்ல வேண்டும் என்கிறார்.
தன் தாய் தந்தையை இழக்கும் பொழுது நயன்தாரா தன் செவித்திறனையும் இழக்கின்றார். இந்த காரணத்தை அறிந்து கொண்ட விஜய் சேதுபதி பின்வாங்க, நயன்தாரா இவரை விட்டு விலகி செல்கின்றார்.
விலகி சென்ற நயன்தாராவுடன் மீண்டும் விஜய் சேதுபதி இணைந்தாரா..? பார்த்திபனை கொலை செய்தாரா..? என்பதே இறுதிகட்டம்.