X
தமிழ் » திரைப்படங்கள் » நானும் ரௌடி தான்
நானும் ரௌடி தான்

நானும் ரௌடி தான்

Action | Comedy | 21 Oct 2015 | U |
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

நானும் ரௌடி தான் கதை

நானும் ரௌடி தான் இந்திய தமிழ் திரைப்படம் இப்படத்தினை விக்னேஷ் சிவா இயக்க விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்துள்ளனர். இப்படம் தனுசின் வண்டர் பார் பில்ம்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் ரவிசந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கதை  :   பாண்டிச்சேரி போலீஸ் அதிகாரியான ராதிகா சரத்குமார் விஜய் சேதுபதியின் தாயாக வருகிறார். இவர் தன்னை ஒரு ரவுடியாக வெளியில் காட்டிகொள்வதற்காக சிறு சிறு பஞ்சாயத்துகளில் தலையிடுகின்றார். இந்நிலையில் நயன்தாராவை கண்டு காதல் வாய்ப்படுகின்றார். ஆனால், நயன்தாரா தன்னை காதலிக்க வேண்டும் என்றால் தன் தாய் தந்தையை கொன்ற பார்த்திபனை கொல்ல வேண்டும் என்கிறார்.  தன் தாய் தந்தையை இழக்கும் பொழுது நயன்தாரா தன் செவித்திறனையும் இழக்கின்றார். இந்த காரணத்தை அறிந்து கொண்ட விஜய் சேதுபதி பின்வாங்க, நயன்தாரா இவரை விட்டு விலகி செல்கின்றார்.  விலகி சென்ற நயன்தாராவுடன் மீண்டும் விஜய் சேதுபதி இணைந்தாரா..? பார்த்திபனை கொலை செய்தாரா..? என்பதே இறுதிகட்டம். 
Read More

நானும் ரௌடி தான் நடிகர்கள் & படக்குழுவினர்

நானும் ரௌடி தான் அணியின் தகவல்

இயக்குனர் விக்னேஷ் சிவன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை அனிருத் ரவிச்சந்தர்
தயாரிப்பாளர் தனுஷ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

நானும் ரௌடி தான் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
சமீப நாட்களில் சறுக்கல் நாயகனாக மாறிக் கொண்டிருந்த விஜய் சேதுபதியைத் தாங்கிப் பிடிக்க வந்திருக்கிற படம் இந்த நானும் ரவுடிதான். ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை கலகலப்பும் விறுவிறுப்பும் கலந்து கட்டி கபடி ஆடுகின்றன. படம் முழுக்க நயன்தாரா ராஜ்ஜியம்தான். அதகளப்படுத்தியிருக்கிறார். ஏன், அத்தனை இயக்குநர்களின் முதல் சாய்ஸாக நயன்தாரா இருக்கிறார் என்பதற்கு இந்தப் படத்தில் விடை இருக்கிறது. தன்னை முத்தமிட விஜய் சேதுபதிக்கு அவர் போடும் நிபந்தனை, காது கேட்காத அவர், ஒவ்வொரு வார்த்தை உச்சரிப்பையும் உள்வாங்கும் விதம் எல்லாமே பிரமாதம். இந்தப் படத்தில் அவர் சொந்தக் குரலில் பேசியிருக்கிறார். இத்தனை நாள் கேட்ட இரவல் குரல்களை விட நன்றாக இருக்கிறது. தொடரட்டும். கதைப் பிடிப்பதை விட, சுவாரஸ்யமாகச் சொல்லத் தெரிய வேண்டும். தனது இரண்டாவது படத்தில் அதைத் தெரிந்து வென்றிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

நானும் ரௌடி தான் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

நானும் ரௌடி தான்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+