twitter

    நடிகையர் திலகம் கதை

    நடிகையர் திலகம் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான சுயசரிதை திரைப்படம். இத்திரைப்படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளனர்.  இவர்களுடன், சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பண்டே, பிரகாஷ் ராஜ், ராஜேந்திர பிரசாத், மோகன் பாபு, நாக சைதன்யா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    கதை :

    சாவித்திரி ஒரு சிறுமியாக, வளர்ந்த பெண்ணாக பின் ஒரு நடிகையாக மாறுகிறார்.

    இந்த பயணத்தில் அவரின் வாழ்க்கையில் பல திருப்பங்கள். சாதாரண பெண்ணாக சினிமா துறையில் நுழைந்து நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து ஒரு பெரும் புகழை பெற்றவர்.

    அப்படியான புகழ் பெற்ற அவரின் வாழ்வில் ஒரு காதல் இவரையும் கடந்து போகிறது. இதில் மற்றொரு பிரபல நடிகர் ஜெமினி கணேசனும் முக்கிய பங்காற்றுகிறார்.

    பிரபலங்களுக்கான காதல் கிசுகிசுக்களில் சிக்கிய இவர்கள் நிஜ வாழ்க்கையில் எப்படியிருந்தார்கள், கடைசி வரை காதல் ஜோடியாக இணை பிரியாமல் இருந்தார்களா?

    மேலும் சாவித்திரியின் கடைசி ஆசையை யார் நிறைவேற்றினார்கள் என்பது படத்தின் மீதிக்கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie நடிகையர் திலகம் with us? Please send it to us ([email protected]).