நட்பே துணை கதை

  நட்பே துணை இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி , ஷாரா, கரு பழனியப்பன், அனகா, விக்னேஷ்காந்த், பாண்டியராஜன், கவுசல்யா, ஹரிஷ் உத்தமன் நடித்துள்ள நகைச்சுவை, காதல் மற்றும் சமூகத்தினை சார்ந்த திரைப்பம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுந்தர்.சி குஷ்பு தயாரிக்க, இசையமைப்பாளராக இப்படத்தின் நாயகனின் ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு இசையமைத்துள்ளது.

  இப்படத்தின் இயக்குனரான பார்த்திபன் தேசிங்கு திரையுலகில் ரெமோ, மான் கராதே திரைப்படங்களுக்கு துணை இயக்குனராகவும், திரைக்கதை மற்றும் வசனஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் இத்திரைப்படத்தில் அரவிந்த் சிங்க் (ஒளிப்பதிவாளர்), பென் ஆலிவர் (எடிட்டிங்), பொன்ராஜ் (ஆர்ட்ஸ்), சந்தோஷ் மற்றும் ஷிவ்ராக் ஷங்கர் (நடனவடிவமைப்பாளர்) என பணியாற்றியுள்ளனர்.

  கதைச்சுருக்கம்
  ஹாக்கி அணியின் தலைவனாக இருக்கும் ஆதி ஹாக்கி மைதானத்தை அபகரிக்க நினைக்கும் ஒரு மாபெரும் நிறுவனத்தை எதிர்த்து போராடும் திரைக்கதை மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட சில விளையாட்டுக்களுக்கு மட்டும் அளிக்கப்படும் முக்கியத்துவம், இந்தியாவில் ஹாக்கி வீரர்களுக்கான பிரச்சனைகள் என கொஞ்சம் அழுத்தமான வசனங்களும், காட்சிகளும் உள்ள திரைப்படம்.

  கதை
  கல்லூரியில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக வாழும் பிரபாகரன் (ஆதி), இவர் இவரது நண்பர் ஷாராவின் தங்கையான அனாகாவை காதலித்து வருகிறார். மறுபுறம் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு மாபெரும் நிறுவனம் தமிழகத்தில் இந்நிறுவனத்தை தொடங்க முடிவுசெய்கிறது. இதற்காக காரைக்குடியில் இருக்கும் ஒரு பழமையான ஹாக்கி மைதானத்தை தேர்வுசெய்கிறது.

  அந்த ஹாக்கி மைதானத்தை முற்றிலுமாய் அகற்றிவிட்டு அங்கு இந்நிறுவனத்தை கட்டுவதற்கு விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் அமைச்சர் அரிச்சந்திரன் (கரு பழனியப்பன்) துணை போகிறார்.

  இந்த பிரச்னையிலிருந்து மைதானத்தை காப்பாற்ற ஆதி மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து ஹாக்கி அணி ஒன்றினை நிறுவி அதனை தேசிய அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என முடிவு செய்கின்றனர். இதற்கு கல்லூரியில் ஹாக்கி பயிற்சியாளராக இருக்கும் ஹரிஷ் உத்தமன் துணை நிற்கிறார்.

  பின்னர் தேசிய அளவில் சாதிக்கின்றனரா... இல்லையா?, மைதானம் காப்பாற்றப்படுகிறாதா?, ஆதி எப்படி இப்பிரச்சனைக்குள் வாருகிறார்?, தவறான அரசியல்வாதிகளுக்கு எப்படி பாடம் புகட்டுகின்றனர் என்பது தான் படத்தின் மீதிக்கதை.  **Note:Hey! Would you like to share the story of the movie நட்பே துணை with us? Please send it to us (popcorn@oneindia.co.in).