X
தமிழ் » திரைப்படங்கள் » நட்பே துணை
நட்பே துணை

நட்பே துணை

Comedy | Drama | 04 Apr 2019 | U |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

நட்பே துணை கதை

நட்பே துணை இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி , ஷாரா, கரு பழனியப்பன், அனகா, விக்னேஷ்காந்த், பாண்டியராஜன், கவுசல்யா, ஹரிஷ் உத்தமன் நடித்துள்ள நகைச்சுவை, காதல் மற்றும் சமூகத்தினை சார்ந்த திரைப்பம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுந்தர்.சி குஷ்பு தயாரிக்க, இசையமைப்பாளராக இப்படத்தின் நாயகனின் ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு இசையமைத்துள்ளது. இப்படத்தின் இயக்குனரான பார்த்திபன் தேசிங்கு திரையுலகில் ரெமோ, மான் கராதே திரைப்படங்களுக்கு துணை இயக்குனராகவும், திரைக்கதை மற்றும் வசனஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் இத்திரைப்படத்தில் அரவிந்த் சிங்க் (ஒளிப்பதிவாளர்), பென் ஆலிவர் (எடிட்டிங்), பொன்ராஜ் (ஆர்ட்ஸ்), சந்தோஷ் மற்றும் ஷிவ்ராக் ஷங்கர் (நடனவடிவமைப்பாளர்) என பணியாற்றியுள்ளனர். கதைச்சுருக்கம் ஹாக்கி அணியின் தலைவனாக இருக்கும் ஆதி ஹாக்கி மைதானத்தை அபகரிக்க நினைக்கும் ஒரு மாபெரும் நிறுவனத்தை எதிர்த்து போராடும் திரைக்கதை மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட சில விளையாட்டுக்களுக்கு மட்டும் அளிக்கப்படும் முக்கியத்துவம், இந்தியாவில் ஹாக்கி வீரர்களுக்கான பிரச்சனைகள் என கொஞ்சம் அழுத்தமான வசனங்களும், காட்சிகளும் உள்ள திரைப்படம். கதை கல்லூரியில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக வாழும் பிரபாகரன் (ஆதி), இவர் இவரது நண்பர் ஷாராவின் தங்கையான அனாகாவை காதலித்து வருகிறார். மறுபுறம் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு மாபெரும் நிறுவனம் தமிழகத்தில் இந்நிறுவனத்தை தொடங்க முடிவுசெய்கிறது. இதற்காக காரைக்குடியில் இருக்கும் ஒரு பழமையான ஹாக்கி மைதானத்தை தேர்வுசெய்கிறது. அந்த ஹாக்கி மைதானத்தை முற்றிலுமாய் அகற்றிவிட்டு அங்கு இந்நிறுவனத்தை கட்டுவதற்கு விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் அமைச்சர் அரிச்சந்திரன் (கரு பழனியப்பன்) துணை போகிறார். இந்த பிரச்னையிலிருந்து மைதானத்தை காப்பாற்ற ஆதி மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து ஹாக்கி அணி ஒன்றினை நிறுவி அதனை தேசிய அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என முடிவு செய்கின்றனர். இதற்கு கல்லூரியில் ஹாக்கி பயிற்சியாளராக இருக்கும் ஹரிஷ் உத்தமன் துணை நிற்கிறார். பின்னர் தேசிய அளவில் சாதிக்கின்றனரா... இல்லையா?, மைதானம் காப்பாற்றப்படுகிறாதா?, ஆதி எப்படி இப்பிரச்சனைக்குள் வாருகிறார்?, தவறான அரசியல்வாதிகளுக்கு எப்படி பாடம் புகட்டுகின்றனர் என்பது தான் படத்தின் மீதிக்கதை.
Read More

நட்பே துணை நடிகர்கள் & படக்குழுவினர்

நட்பே துணை அணியின் தகவல்

இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு டி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஹிப்ஹாப் தமிழா
தயாரிப்பாளர் சுந்தர் சி, குஷ்பு
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

நட்பே துணை விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
தேசிய விளையாட்டாகவே இருந்தாலும், இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு எந்த நிலையில் இருக்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது படம். அதேபோல், முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான படமாக இருந்தாலும், சிகரெட், சரக்கு, ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் என எதுவும் இல்லாமல், படத்தை கண்ணியமாக எடுத்ததற்காக இயக்குனர் பார்த்திபனுக்கும், ஆதிக்கும் வாழ்த்துக்கள். பொதுவாக விளையாட்டை மையப்படுத்திய படங்கள் எல்லாமே ஒரு டெம்ப்லேட்டுக்குள் அடங்கிவிடும். நட்பே துணையும் அதற்கு விதிவிலக்கல்ல. ஏற்கனவே வெற்றி பெற்ற பல விளையாட்டு படங்களை தான் இந்த படம் நினைவூட்டுகிறது. ஆனால் இதில் கையாளப்பட்டுள்ள நட்பு எனும் உணர்வு, இளைஞர்களை சுண்டி இழுக்கும் காந்த சக்தி கொண்டது. ஆனால் இசையில் பின்னியெடுத்திருக்கிறார். குறிப்பாக, கடைசி அரை மணி நேரம் வரும் ஹாக்கி போட்டியில், ஆதியின் இசை தான் பார்வையாளரின் ஹார்ட்பீட்டை ஏற்றுகிறது. இளமை துள்ளலுடன் ஒலிக்கும் 'சிங்கிள் பசங்க' பாடல் ஆட்டம்போட வைக்கிறது.

நட்பே துணை திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

நட்பே துணை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+