Just In
- 1 hr ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 2 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
- 3 hrs ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 3 hrs ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- News
தற்சார்பு பாரதம் தந்த கொரோனா தடுப்பூசி- அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Automobiles
எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...
- Finance
'மேட் இன் அமெரிக்கா' ஜோ பிடன் கையெழுத்திடும் புதிய உத்தரவு..!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நட்பே துணை பட இயக்கத்தில் நடிகர் ஆதி தலையிட்டாரா? இயக்குனர் பார்த்திபன் விளக்கம்!

சென்னை: நட்பே துணை படத்தின் இயக்கத்தில் நடிகர் ஆதி தலையிட்டதாக வெளியான செய்தி குறித்து அப்படத்தின் இயக்குனர் பார்த்திபன் விளக்கமளித்துள்ளார்.
மீசைய முறுக்கு படத்தை அடுத்து ஹிப்பாப் தமிழா ஆதி நடிக்கும் புதிய படம் நட்பே துணை. இப்படம் நாளை ரிலீசாகிறது.
இந்நிலையில் நட்பே துணை படத்தின் இயக்குனர் பார்த்திபன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது,
Exclusive உறியடி 2.. நிச்சயம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. இயக்குனர் விஜய் குமார் நம்பிக்கை!

நட்பே துணையின் கதை
"நட்பே துணை ஹாக்கி விளையாட்டை பற்றிய படம். திறமை இருந்தும் நிராகரிக்கப்பட்ட ஹாக்கி வீரர்களுக்கு இப்படம் சமர்பனம். ஒரு மேட்ச்சில் தோற்றுவிட்டால், ஒரு வாரம் கூட சாப்பிடாமல் இருந்த விளையாட்டு வீரர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களின் தாக்கத்தினால் தான் இந்த படத்தை எடுத்துள்ளேன்.

பாண்டிச்சேரியில் நடக்கும் கதை
பாண்டிச்சேரி தான் கதை களம். அது எனது சொந்த ஊர் என்பதால், அதையே கதைக்களமாக பயன்படுத்தினோம். இந்த படத்தில் ஹாக்கியை தாண்டி, மீனவர்களின் வாழ்க்கையும் இருக்கும். பாண்டிச்சேரியை வேறொரு கோணத்தில் காட்டியிருக்கிறோம்.

ஆதிக்கு காயம்
இந்த படத்தில் நிறைய தேசிய அளவிலான ஹாக்கி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் சரிக்கு சமமாக நம்ம பசங்களும் விளையாடி இருக்கிறார்கள். ஆதிக்கு தோளில் அடிப்பட்டு ஒரு வாரம் அவதிப்பட்டார். படப்பிடிப்பின் போது நிறைய பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையெல்லாம் சமாளித்து தான் இப்படத்தை எடுத்துள்ளோம்.

கடுமையான உழைப்பு
மொத்த படக்குழுவுமே எனக்கு உறுதுணையாக இருந்தனர். கேமரா மேன் அரவிந்த் உள்பட, அனைவருமே கடுமையாக உழைத்திருக்கிறார்கள். பாண்டியராஜன், கரு.பழனியப்பன் என அனைவருமே சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தனர். நிறைய இளைஞர்கள் இந்த படத்தில் வேலை செய்துள்ளனர்.

ஆதி தலையிட்டாரா?
நடிகர் ஆதி எனது வேலையில் தலையிடுவதாக வெளியான செய்தி தவறானது. ஒரு திரைப்படம் என்பது அனைவருடைய கூட்டு முயற்சியில் தான் உருவாகிறது. இங்கு எல்லோருடைய ஆலோசனைகளும் தேவை. அப்படி ஏதாவது ஆலோசனை தரும்போது, மற்றவர்கள் அதனை தவறாக புரிந்துகொண்டு செய்தி வெளியிட்டிருக்கலாம்", என இயக்குனர் பார்த்திபன் கூறினார்.