நையப்புடை இயக்குனர் விஜய கிரண் இயக்கத்தில் பா விஜய், எஸ் ஏ சந்திரசேகர், சாந்தினி, ராஜேந்திரன் மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கதை :
70 வயதான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக வரும் எஸ் ஏ சந்திரசேகர், அநியாயத்தை கண்டு கொந்தளிப்பவராக வருகிறார். ஒரு நாள் பேருந்தில் பயணிக்கும்போது ஒரு ரவுடி கும்பலை அடித்து துவம்சம் செய்கிறார். அதனை ஒரு பள்ளி மாணவி வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிறக்கம் செய்கிறார். அந்த வீடியோ பிரபலமாகி பத்திரிக்கையாளரான பா விஜயுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் இணைந்து தவறுகளை தட்டி கேட்கின்றனர். இதுவே இத்திரைப்படத்தின் கதையம்சம்.