நெஞ்சம் மறப்பதில்லை கதை

  நெஞ்சம் மறப்பதில்லை இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திகில், திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மதன், சித்தார்த் ராவ், அனிருத் கிருஷ்ணா இணைந்து தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

  திகில் மற்றும் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரசன்ன எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தினை தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் ராக்போர்ட் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.  நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் கதை

  கதைக்கரு: சில அதிகாரம் படைத்த கெட்டவர்களால், அப்பாவி நல்லவர்கள் கொலை செய்யப்பட்டு பின் நல்லவர்கள் ஆவியாக வந்து தன்னை கொலை செய்த கெட்டவர்களை பழிவாங்கும் திகில் படலம் தான் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் கதைக்கரு. இந்த சாதாரண கதையினை இயக்குனர் செல்வராகவன் தனது பாணியில் திரைக்கதை வடிவமைத்து இயக்குள்ளார்.

  கதை:

  மிகவும் மோசமான சூழலில் வாழும் ராம்சே என்னும் ராமசாமி (எஸ். ஜே. சூர்யா), ஒரு பணக்கார வீட்டு பெண்ணை பார்த்து சில சூழ்ச்சிகள் செய்து பணக்கார குடும்பத்திற்கு மருமகனாக செல்கிறார். ஒரு பணக்காரரின் ஒரே மகளான ஸ்வேதா (நந்திதா ஸ்வேதா)-வை திருமணம் செய்து கொள்கிறார்.

  வீட்டோடு மருமகனாகவும் பங்களாவில் இருக்கும் ராம்சே, தனது பணக்கார வாழ்க்கையை சந்தோசமாக அனுபவித்து வருகிறார். ராம்சே - ஸ்வேதா தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. நான்கு வயது ஆகும் அந்த ஆண் குழந்தை பார்த்து கொள்ளவும், பராமரித்து கொள்ளவும் மரியம் (ரெஜினா) வேலைக்கு வருகிறார்.

  ரெஜினா ஒரு ஆதரவற்ற பெண். சிறு வயதில் இருந்து கிறிஸ்துவ ஆசிரமத்தில் வாழும் இவர், கடவுள் மேல் பயங்கர பக்தி கொண்டவர். சமுதாயத்தின் சூழ்ச்சிகள் அறியாத அப்பாவி.

  தனது வீட்டில் வேலை செய்யும் ரெஜினா-வை எஸ்.ஜே. சூர்யா அடைய விரும்புகிறார். ஆனால் ரெஜினா விருப்பம் இல்லாமல் விலகி செல்ல, ரெஜினா-வை பலாத்காரம் செய்து கொலை செய்கிறார், எஸ். ஜே. சூர்யா.

  பின் ரெஜினா ஆவியாக வந்து எஸ். ஜே. சூர்யா-வை பழிவாங்குவதே படத்தின் கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie நெஞ்சம் மறப்பதில்லை with us? Please send it to us (popcorn@oneindia.co.in).