X
நெஞ்சுக்கு நீதி
Action | Drama | Thriller | 20 May 2022 | U/A | 140 Mins
Tamil

நெஞ்சுக்கு நீதி கதை

நெஞ்சுக்கு நீதி இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி, இளவரசு, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தினை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க, உதயநிதி ஸ்டாலின் தனது 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் திபு நின்னான் தாமஸ் இசையமைத்துள்ளார்.

சமூக கருத்துக்கள் உள்ளடக்கிய ஒரு ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படம் ஹிந்தி சினிமாவில் வெளியாகி மிக பெரிய புகழ் பெற்ற "ஆர்டிகிள் 15" திரைப்படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படமாகும்.



நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் கதை

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள், முப்பது ரூபாய் கூலியை உயர்த்த சொல்லிக் கேட்டதற்காக அவர்கள் மூவரும் கூட்டு பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இரு சிறுமிகள் மரத்தில் தூக்கிலிடப்படுகின்றனர். உயர்ந்த சாதியாக நினைத்து கொண்டு தலித் மக்களை ஆட்டுவிக்கும் கூட்டம், எப்படி இவர்கள் உரிமைகளை பெற நினைக்கலாம் என ஒடுக்க நினைக்கும் சாதிய ஆணவத்தை ஆரம்பத்திலேயே படம் எடுத்துரைக்கும். அதில், ஒரு சிறுமி மட்டும் மிஸ்சிங். அந்த கிராமத்திற்கு கூடுதல் காவல் ஆணையராக வரும் உதயநிதி ஸ்டாலின் ஆணவக் கொலை என முடிக்க நினைக்கும் இந்த வழக்கை எப்படி விசாரிக்கிறார், மூன்றாவது சிறுமிக்கு என்ன ஆனது என்பது தான் இந்த படத்தின் கதை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+