நேர்கொண்ட பார்வை கதை

  நேர்கொண்ட பார்வை இயக்குனர் வினோத் எச் இயக்கத்தில் அஜித் குமார், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளளார்.

  படத்தை பற்றிய தகவல்கள்

  இத்திரைப்படம் ஹிந்தியில் வெளிவந்து வெற்றிபெற்ற "பிங்க்" திரைப்படத்தின் ரீமேக் ஆக உருவாகிவுள்ள திரைப்படம். மேலும் இத்திரைப்படத்தில் ஹிந்தியில் டாப்சீ கதாபாத்திரத்தில் சிரத்தா ஸ்ரீநாத் தமிழில் நடிக்கவுள்ளார், ஹிந்தியில் கிரடிக்குலஹரி கதாபாத்திரத்தில் அபிராமி வெங்கடாச்சலம் நடிக்க மற்றும் ஹிந்தியில் நடித்த ஆண்ட்ரியா தரிங் தமிழிலும் இவரே தொடர்ந்து நடிக்கவுள்ளார்.  கதை

  இத்திரைப்படத்தின் கதை தன் வாழ்க்கையை தன் விருப்பத்திற்கேற்ப வாழவேண்டும் என்று நினைக்கும் மூன்று பெண்ணியவாதிகள் பற்றிய கதை. எவ்வீத தடைகளும், பொறுப்புகளும் இன்றி சுற்றித்திரிந்து தன் வாழ்க்கையை சந்தோசமாக வாழும் (சிரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரிங்) ஆகிய மூன்று பெண்களும் பப், டான்ஸ் என குடியும் குதூகலமாக வாழ்கின்றனர்.

  இவர்கள் வாழ்வில் நடக்கும் ஒரு விபத்து இது எல்லாவற்றையும் மாற்றுகிறது. இவர்கள் மூவரும் மூன்று இளைஞர்களால் ஒரு பிரச்சனைகளுக்குள் தள்ளப்படுகிறார்கள். இந்த பிரச்சனையால் சமூகம் இவர்களுக்கு வேற ஒரு பெயரையும் தருகிறது. இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க நீதிமன்றத்துக்கு செல்கின்றனர், அங்கு இவர்களுக்காக அஜித் வாதாடுகிறார், எதிர் வழக்கலைஞராக ரங்கராஜ் பாண்டே வாதாடுகிறார், இவர்களுக்கு இடையே நடக்கும் விவாதமே இப்படத்தின் மீதிக்கதை.

  இத்திரைப்படம் ஹிந்தி வெளியான பிங்க் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக்-ஆக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கேற்ப இப்படத்தின் திரைக்கதையில் ஒருசில மாற்றங்கள் செய்துள்ளனர்.

  ப்ரோமோஷன்ஸ் / அறிவிப்புகள்

  இத்திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2019-ம் ஆண்டு மார்ச் 4-ல் வெளியானது. மேலும் தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அஜித் குமாரின் "விஸ்வாசம்" திரைப்படமானது, திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், "தல" அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவரவிருந்த அஜித், போனி கபூர், ஹச். வினோத் கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் வெளியிட்டு தேதியை சற்று தள்ளிவைக்கப்பட்டுள்னர் படக்குழுவினர்.

  ரிலீஸ்

  2019-ம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம் இத்திரைப்படம் வெளியாகக்கூடும் என படக்குழுவினர் தெரிவித்த தகவலை தொடர்ந்து, இத்திரைப்படமானது 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ல் வெளியாகும் என 2019 மார்ச் 25-ம் தேதியில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவுப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். 

  இத்திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டருடன் இப்படத்தின் ட்ரைலர் 2019 ஜூன் 12ல் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

  இத்திரைப்படம் 2019-ஆகஸ்ட்-6ல் சிங்கப்பூரில் பிரத்தியேக காட்சியாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நேர்மறை விமர்சனங்கள் பெற்றுள்ளது.
  **Note:Hey! Would you like to share the story of the movie நேர்கொண்ட பார்வை with us? Please send it to us (popcorn@oneindia.co.in).