X
தமிழ் » திரைப்படங்கள் » விஸ்வாசம்
விஸ்வாசம்

விஸ்வாசம்

Action | 10 Jan 2019 | U |
Tamil

2.6 /5 Users

3.5 /5 Filmibeat

விஸ்வாசம் கதை

விஸ்வாசம்  இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார் நான்காவது முறையாக இணைந்து பணியாற்றும் அதிரடி, காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் அஜித் குமாருடன் நயன்தாரா, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. இத்திரைப்பத்திற்கு டி இமான் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.  கதை :   தேனி மாவட்ட கிராமத்தில் சொந்த பந்தங்களுடன் மகிழ்ச்சியாக வசித்து வருகிறார் அஜித். ஊர் மக்கள் அஜித் மீது தனி மரியாதை வைத்திருக்கிறார்கள். அஜித் நயன்தாராவை பார்த்த மறுகணமே காதல் கொண்டு அவரை திருமணமும் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தை சிறு வயதாக இருக்கும் போதே அஜித் - நயன்தாரா இருவரும் அஜித்தின் சண்டை மற்றும் விரோதம் காரணமாக பிரிந்து விடுகின்றனர். நயன்தாரா தனது மகள் அனிகாவை அழைத்துக் கொண்டு மும்பை சென்றுவிடுகிறார். 10 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கோவில் திருவிழாவுக்கு ஊர்மக்கள் அனைவரும் கூடுவது அந்த ஊர் வழக்கம். அந்த வகையில் தனித்து வாழும் தனது மருமகன் மனைவி, மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்படும் அஜித்தின் மாமா தம்பி ராமையா, நயன்தாரா மற்றும் அனிகாவை திரும்ப அழைத்து வரும்படி கூறுகிறார். இதையடுத்து இருவரையும் அழைத்துவர மும்பை செல்கிறார் அஜித். அங்கு தனது மகள் அனிகாவுக்கு, ஜெகபதி பாபுவால் ஆபத்து இருப்பதை அறிந்து கொள்கிறார்.  அங்கு தான் அப்பா என்பதை சொல்லாமல், அனிகாவுக்கு வரும் ஆபத்துக்களை அஜித் தடுக்கிறார். அதன் பிறகு,  தனது மகளை அஜித் எப்படி காப்பாற்றுகிறார்? மகளை கொல்ல நினைக்கும் ஜெகபதி பாபு யார்? அவர் ஏன் அனிகாவை கொல்ல நினைக்கிறார்?  தன் மகளோடும் மனைவி நயன்தாராவுடனும் மீண்டும் இணைந்தாரா? என்பதே படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
Read More

விஸ்வாசம் நடிகர்கள் & படக்குழுவினர்

விஸ்வாசம் அணியின் தகவல்

இயக்குனர் சிவா
சங்கதி கே. மணிகண்டன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை டி இமான்
தயாரிப்பாளர் தி ஜி தியாகராஜன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

விஸ்வாசம் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
மகளைக் காக்க பாடுபடும் அப்பா பற்றிய கதைதான் விஸ்வாசம் படத்தின் கரு. இதில், காதல், காமெடி, செண்டிமெண்ட், அடிதடி என அஜித் ரசிகர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் தேவையான அளவு சேர்த்து படமாக்கி இருக்கிறார் சிவா. முதல் பாதியில் ஒரு மாதிரி இளமையான காதல் ரவுசு என்றால், பின்பாதியில் மனைவியை காதலிப்பது வேறொரு ரகம். இரண்டையும் தனக்கே உரிய ஸ்டைலில் கச்சிதமாக கையாண்டிருக்கிறார் அஜித். பின்பாதியில் மகளின் பாசத்திற்காக ஏங்கும் அப்பாவாக நம் கண்களைக் கலங்க வைக்கிறார். நிச்சயம் தூக்குதுரையும், அவரது மகளும் வரும் காட்சிகள் பெண் குழந்தைகளைப் பெற்ற அப்பாக்களுக்கு மறக்க முடியாதவையாக இருக்கும். நல்லக் குடும்பக் கதையை குடும்பத்தோடு நிம்மதியாக பார்க்கும் வகையில் ஆபாசமோ, அருவருக்கத்தக்க இரட்டை அர்த்த வசனங்களோ இல்லாமல் படமாகத் தந்திருப்பதற்காகவே சிவாவை நிச்சயம் பாராட்டலாம்.

விஸ்வாசம் பாடல்கள்

Music Director: டி இமான்

விஸ்வாசம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • Super movie

×
2.6 /5 Your Rating

விஸ்வாசம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+