விஸ்வாசத்தை கொண்டாட சத்யஜோதி ஃபிலிம்ஸ் செய்த காரியம்...குத்தாட்டம் போடும் ரசிகர்கள்
சென்னை : அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் இப்போதும் கொண்டாடி வருகிறது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்காக சத்யஜோதி ஃபிலிம்ஸ் செய்த காரியம் ரசிகர்களை பட்டாசு வெடித்து கொண்டாட வைத்துள்ளது.
2019 ம் ஆண்டு அஜித், நயன்தாரா நடிப்பில் டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கிய படம் விஸ்வாசம். கிராமத்து ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த படமாக இந்த படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தது. டி.இமான் இசையமைத்திருந்தார்.

வேஷ்டி சட்டையில் அஜித்
அஜித் முதல் முறையாக முழுக்க முழுக்க வேஷ்டி சட்டையில் கிராமத்து ஆளாக நடித்த படம் இது. அதனால் இந்த படத்தை ரசிகர்கள் ஏற்பார்களா என்ற சந்தேகம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்ட வேட்டி கட்டு பாடல் பெற்ற வேற லெவல் ஹிட்டை பார்த்து விட்டு, அஜித் என்ன கெட்அப்பில் நடித்தாலும் ரசிகர்கள் ஏற்பார்கள் என அனைவரும் சொல்ல துவங்கி விட்டனர்.

தேசிய விருது பெற்ற பாடல்
படம், பாடல், கதை, நடிப்பு என அனைத்தும் மிகப் பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றன. இந்த படத்தில் வரும் கண்ணான கண்ணே என்ற அப்பா - மகள் சென்டிமென்ட் பாடலுக்கு இசை அமைத்ததற்காக இமானுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த பாடல் பலரின் ஃபேவரைட் மெலடி பாடலாக இப்போது வரை இருந்து வருகிறது.

பிற மொழிகளிலும் ஹிட்
விஸ்வாசம் படம் அனைவரையும் ரசிக்க வைக்கும் விதமான படமாக அமைந்தது. பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற இந்த படம் 160 முதல் 200 கோடி ரூபாய் வசூலை பெற்றது. இந்த படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு, இதே டைட்டிலில் வெளியிடப்பட்டது. கன்னடத்தில் ஜகமல்லா என்ற பெயரில் 2019 ம் ஆண்டு மார்ச் மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது. அங்கும் இந்த படம் மாபெரும் ஹிட் கொடுத்தது.

புதிய போஸ்டர் ரிலீஸ்
2019 ம் ஆண்டு ஜனவரி 10 ம் தேதி ரிலீசான விஸ்வாசம் படம் ரிலீசாகி நேற்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இருந்தாலும் தற்போது வரை இந்த படத்திற்கு இருக்கும் வரவேற்பு குறையவில்லை. இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் மூன்று ஆண்டு வெற்றியை கொண்டாடும் விதமாக புதிய போஸ்டர் ஒன்றை சத்யஜோதி ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.

கொண்டாடும் ரசிகர்கள்
இந்த போஸ்டரை அஜித் ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகிறார்கள். வலிமை ரிலீஸ் தள்ளி போன சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது. இந்த போஸ்டரை அதிகமானவர்கள் லைக் செய்தும், ஷேர் செய்தும் வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











