ஆரஞ்சு மிட்டாய் தமிழ் நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்பத்தை இயக்குனர் பிஜு விஸ்வநாத் இயக்க, விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் மற்றும் ஆறுமுகம் பாலா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, விஜய் சேதுபதி தயாரித்துள்ளார்.
கதை :
கைலாசம் என்ற நோயால் முதிர்ந்த வயதானவரை மருத்துவமனைக்கு ஏற்றி செல்ல வரும் தந்தையை இழந்து ஒரு மாதம் ஆன ரமேஷ் திலக். இவ்விருவருக்கும் இடையே நடக்கும் கதையும் உணர்ச்சிகளுமே இங்கே படமாக்கப்பட்டுள்ளன.