twitter

    ஒத்த செருப்பு சைஸ் 7 கதை

    ஒத்த செருப்பு சைஸ் 7 தமிழ் திரையுலகில் எழுத்தாளராகவும், தனது அழுத்தமான வசனங்களால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் பார்த்திபன் தானே இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ள திரைப்படம். இத்திரைப்படத்தில் ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையில் தனது உணர்ச்சிப்பூர்வமான எழுத்துகளால் ஒழி, ஒலி என இவ்விரண்டையும் அழகாக வழி நடத்தக்கூடிய படக்குழுவினரை கொண்டு ரசிகர்கள் ரசிக்கும் வகையில் உருவாக்கியுள்ளார் பார்த்திபன்.

    இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சி சத்யா-வின் பின்னணி இசையில், ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் ஆர் சுதர்சன்-ன் பணியில் சுவாரஸ்யமாக உருவாக்கியுள்ளார் படக்குழுவினர்கள்.

    ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பின்னனி இசைக்கு ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி பணியாற்றியுள்ளார்.

    ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்திற்கு தேசிய விருது

    தானே இயக்கி, முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரு. பார்த்திபனின் சிந்தனையில் உருவான இப்படம், விமர்சனம் ரீதியாக மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படமாகும். சாதாரண திரைக்கதையை வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து, தனது நடிப்பு மற்றும் வசனங்கள் மூலம் இப்படத்தினை படமாக்கியுள்ளார், பார்த்திபன்.

    இப்படத்திற்கு 2019ஆம் ஆண்டின் தேசிய விருதினை 'ஸ்பெஷல் ஜூரி' என்னும் வகையில் தேர்ந்தெடுத்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் ஒரு பின்னணி ஒலி கலைஞராக பணியாற்றிய ரேஸுல் பூக்குட்டி 2019ஆம் ஆண்டின் சிறந்த பின்னணி ஒலி கலைஞராக இந்தியா அரசினால் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்.

    கதை

    ஒரு கொலை குற்றத்திற்காக மாசிலாமணி (பார்த்திபன்) மற்றும் இவரது நோய்வாய்ப்பட்ட மகன் இருவரையும் காவல் அலுவலகத்திற்கு அழைத்து வருகின்றனர் காவல் துறையினர். ஒரு அறையினுள் குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் பார்த்திபனை காவல் துறையினை விசாரணை மேற்கொள்கின்றனர். உண்மையில் பார்த்திபன் கொலை செய்தாரா? நடந்து என்ன? என்பதே படத்தின் கதை.

    இக்கதையில் எந்த ஒரு துணை நடிகரும் இன்றி படம் முழுக்க பார்த்திபன் மட்டுமே தோன்றி நடித்துள்ளார். முழுக்க முழுக்க பார்த்திபனின் கதைக்கரு மற்றும் வசனங்களில் உருவாகியுள்ளது ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம்.

    ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் தகவல்கள்

    திறமையான குழுவினை கொண்டு ஒரு சுவரசயமாக ஒரு படத்தினை உருவாக்கி, ரசிகர்களுக்கு சலிப்புத்தன்மை வராத அளவில் தனது நடிப்பினை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார் பார்த்திபன்.

    ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் முழுக்க இவரே பயணிக்கிறார். எந்த ஒரு துணை நடிகரும் இன்றி படத்தின் முழு நேரமும் இவர் மட்டுமே திரையில் பயணிக்கிறார். ஒரு மனிதனின் தனிமை நேரங்களில் அவன் காதுகளில் எட்டும் சின்னஞ்சிறு சத்தங்கள் மற்றும் தனிமையின் அமைதி என ஒலியினை அழகாக எடுத்து வேறுபடுத்தி காட்டியுள்ளார் ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி. 


    **Note:Hey! Would you like to share the story of the movie ஒத்த செருப்பு சைஸ் 7 with us? Please send it to us ([email protected]).