பரியேறும் பெருமாள் தமிழ் அதிரடி த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை மாரி செல்வராஜ் இயக்க, கதிர், ஆனந்தி, யோகி பாபு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
கதை :
ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பரியேறும் பெருமாள் (கதிர்), எப்படியாவது படித்து பட்டம் பெற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு திருநெல்வேலி சட்டக்கல்லூரியில் சேருக்கிறார். அவருக்கு இருக்கும் ஒரே பிரச்சினை ஆங்கிலம். இதனால், ஆசிரியர்கள், சக மாணவர்கள் என எல்லோரிடமும் அசிங்கப்படுகிறார். சக மாணவியான ஜோ... ஜோதி மகாலட்சுமி (ஆனந்தி) கதிருக்கு ஆங்கிலம் கற்றுத்தருகிறார். இருவருக்குள்ளும் நட்பு மலர, நெருக்கம் அதிகமாகிறது. ஆனந்தியின் தந்தை மாரிமுத்துவுக்கு சந்தேகம் ஏற்பட, அவரின் குடும்பத்தாரால் கடுமையாக தாக்கப்படுகிறார் கதிர். ஆதிக்க சாதியினரின் அட்டூழியங்களை தாண்டி, அவரால் சட்டப்படிப்பை முடிக்க முடிந்ததா? ஆனந்தியுடனான உறவு என்ன ஆனது என்பது தான் படம்.