பதான் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக் கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் என முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் தத்லானி இசையமைத்துள்ளார்.
2023 குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படம் வெளியாகியுள்ளது. ஹிந்தி சினிமாவில் பலரால் கொண்டாடப்படும் ஸ்பை சீரியஸ் படமாக இப்படம் உருவாகி பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது.
பதான் கதை
இந்தியாவின் ஸ்பை ஏஜென்ட் ஆன ஜான் ஆபிரகாம் ஒரு கட்டத்தில் இந்திய அரசுக்கு எதிராக மாறுகிறார். இந்தியாவின் மீது ஒரு தாக்குதல் ஏற்படுத்த முயற்சிக்கும் ஜான் ஆபிரகாம்-யை தடுத்து நிறுத்த அவருக்கு எதிராக ஒருவரை களம் இறங்குகின்றனர்.
ஜான் ஆபிரகாம்யை தடுத்து நிறுத்தும் ஏஜெண்டாக பதான் (ஷாருக்கான்) வருகிறார். ஆனால் ஷாருக்கான் ஒரு கட்டத்தில் வில்லனை மறந்துவிட்டு நாயகியோடு ரொமான்ஸ் செய்கிறார். ஷாருக்கானை காதல் வலையில் வீழ்த்தி திசைதிருப்பும் நாயகி யார்? எதற்காக இதனை செய்கிறார்? என பல ட்விஸ்ட்டுகள். பின் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.