10 என்றதுக்குள்ள கதை

    10 என்றதுக்குள்ள தமிழ் காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை விஜய் மில்டன் இயக்க, எ ஆர் முருகதாஸ் தயாரித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் மற்றும் சமந்தா நடிக்க இமான் இசையமைத்துள்ளார்.

    கதை : 

    10 என்றதுக்குள்ள பெயரிலேயே படத்தின் கரு ஒளிந்துள்ளது. இத்திரைப்படத்தில் விக்ரம் தன்னை ஜேம்ஸ் பாண்ட் போன்ற ஒரு பெரிய ஹீரோவாக எண்ணிக்கொண்டு எந்த காரியமானாலும் அதனை 10 எண்ணுவதற்குள் முடித்துவிடுகிறார். 15 முறை வண்டி ஓட்டுவதில் தோற்றுப்போன சமந்தாவிற்கு விக்ரம் பயிற்சியாளராக வருகிறார். 

    மறுபுறம் உத்தரகாண்டில் இருக்கும் ஒரு கும்பல் சமந்தாவை கடத்த பசுபதிக்கு வேலை தருகின்றது. அதன் பொறுப்பு விக்ரமிடம் வர காரில் சமந்தா இருப்பதை அறியாமல் வண்டியை ஒப்படைக்க உதிரகாண்ட் செல்கிறார். விக்ரம் சமந்தாவை உத்தரகாண்டில் உள்ளவர்களிடம் ஒப்படைத்தாரா? அவர்களுக்கு நேர்ந்தது என்ன..? இவர்களை ஆக்சனில் இழுப்பதற்கான பின்னணி என்ன என்பதை விறுவிறுப்புடனும், ட்விஸ்ட்களுடனும் திரையில் காணுங்கள்..
    **Note:Hey! Would you like to share the story of the movie 10 என்றதுக்குள்ள with us? Please send it to us (popcorn@oneindia.co.in).