பட்டிபுலம் இயக்குனர் சுரேஷ் இயக்கத்தில் புதுமுக நடிகர்களுடன் யோகிபாபு நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் எஸ் திருமுருகன் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் யோகி பாபு பேய் வேடத்தில் நடிக்க, அமிதா ராவ் கதாநாயகியாக நடிக்கிறார். ஒளிப்பதிவாளர் ஆர்.கே.வர்மா மற்றும் இசையமைப்பாளர் வல்லவன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இத்திரைப்படத்தை பற்றி இப்படத்தின் இயக்குனர் ‘கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பட்டிபுலம் என்ற ஊரில் சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதால், ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது கதை’ என்றார். இத்திரைப்படத்தை பற்றிய மற்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும்.