பழைய வண்ணாரப்பேட்டை தமிழில் வரவிருக்கும் அரசியல் சார்ந்த திர்ல்லர் திரைப்படம்.இத்திரைப்படம் சென்னையில் இருக்கும் தென் சென்னை பகுதியை சார்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை ஜி மோகன் இயக்க, பிரஜின், நிஷாந்த் மற்றும் ரிச்சர்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜுபின் என்பவர் இசையமைத்துள்ளார்.
கதை :
இன்ஜினியரிங் மாணவனாக வருகிறார் ப்ரஜின். அவர் தன் ஐந்து நண்பர்களுடனும், காதலி அஷ்மிதாவுடனும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்.
அவர் இருக்கும் வண்ணாரப்பேட்டை ஏரியாவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு கொலை நடக்கின்றது. அதன் காரணமாக சந்தேகத்தின் பேரில் ப்ரஜின் நண்பர்களுள் ஒருவரை காவல்துறை கைதுசெய்து கொண்டு செல்கிறது.
இதனால், தன் நண்பனை வெளியில் எடுக்க, உண்மையான குற்றவாளியை தேட முற்சிக்கிறார் ப்ரஜின். அதேவேளையில், காவல் துறை அதிகாரி ரிச்சர்டும் உண்மையான குற்றவாளியை தேடுகிறார்.
இவ்விருவர்களில் யார் குற்றவாளியை முதலில் நெருங்கியது. சிறையில் இருந்த பிரஜினின் நண்பனுக்கு என்ன ஆனது. வண்ணாரப்பேட்டையில் இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்ததா ? என்பதே மீதிக்கதை.