பேரழகி ஐ.எஸ்.ஒ இயக்குனர் விஜயன் இயக்கத்தில் ஷில்பா மஞ்சுநாத் இரட்டை வேடங்களில் நடிக்கும் அறிவியல் புனைவு திரைப்படம். இத்திரைப்படத்தில் சச்சு, ராஜேந்திரன், டெல்லி கணேஷ் சரவண சுப்பையா உள்பட பலர் நடித்துள்ளர்னர். இத்திரைப்படத்தினை நாகராஜன் தயாரிக்க, எடிட்டர் இளவரசன் எடிட்டிங்கில் இசையமைப்பாளர் சார்லஸ் தன இசையமைத்துள்ளார்.
கதை
முந்தைய காலத்தில் வாழ்ந்த வந்த ராஜா ஒருவர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு மருந்து ஒன்றினை கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவ குறிப்புக்கள் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது.
ஷில்பாவின் பாட்டியாக வரும் சச்சு, அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளகிறார். பாட்டி சச்சு, இப்போது அழகான பேத்தியாக மாறிவிடுகிறார். ஷில்பா தான் அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு நடக்கும் குழப்பங்களை நகைச்சுவையுடன் கதை நகர்கிறது.