X
தமிழ் » திரைப்படங்கள் » பேரழகி ஐ.எஸ்.ஒ
பேரழகி ஐ.எஸ்.ஒ

பேரழகி ஐ.எஸ்.ஒ

Drama | Sci - Fi | 24 May 2019 | U | 118 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

பேரழகி ஐ.எஸ்.ஒ கதை

பேரழகி ஐ.எஸ்.ஒ இயக்குனர் விஜயன் இயக்கத்தில் ஷில்பா மஞ்சுநாத் இரட்டை வேடங்களில் நடிக்கும் அறிவியல் புனைவு திரைப்படம்.  இத்திரைப்படத்தில் சச்சு, ராஜேந்திரன், டெல்லி கணேஷ் சரவண சுப்பையா உள்பட பலர் நடித்துள்ளர்னர். இத்திரைப்படத்தினை  நாகராஜன் தயாரிக்க, எடிட்டர் இளவரசன் எடிட்டிங்கில் இசையமைப்பாளர் சார்லஸ் தன இசையமைத்துள்ளார். கதை முந்தைய காலத்தில் வாழ்ந்த வந்த ராஜா ஒருவர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு மருந்து ஒன்றினை கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவ குறிப்புக்கள் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது. ஷில்பாவின் பாட்டியாக வரும் சச்சு, அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளகிறார். பாட்டி சச்சு, இப்போது அழகான பேத்தியாக மாறிவிடுகிறார். ஷில்பா தான் அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு நடக்கும் குழப்பங்களை நகைச்சுவையுடன் கதை நகர்கிறது.
Read More

பேரழகி ஐ.எஸ்.ஒ நடிகர்கள் & படக்குழுவினர்

பேரழகி ஐ.எஸ்.ஒ அணியின் தகவல்

இயக்குனர் விஜயன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சார்லஸ் தன
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பேரழகி ஐ.எஸ்.ஒ விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
ஒரு சயின்ஸ் பிக்ஷன் படத்தில் குறைந்தபட்ச டீடெயிலிங்காவது வேண்டும். ஆனால் அது எதுவும் இந்த படத்தில் இல்லை. எனினும் படம் போரடிக்காமல் நகர்கிறது. 20 வயது பியூட்டியாக மாறி பாட்டி செய்யும் அலப்பறைகள் 'அடடேய்' என காமெடிக்கு கேரண்டி கொடுக்கிறது. அதேபோல், மெசேஜ் சொல்கிறேன் பேர்வழி என எதையும் திணிக்காமல் இருந்ததற்காக இயக்குனருக்கு ஒரு சபாஷ். இதய ராணி ஷில்பாவுக்கு மூன்றாவது படமே ஹீரோயின் சப்ஜெட். அதுவும் டபுள் ஆக்ஷன். அதை சரியாக உணர்ந்து அட்டகாசமாக நடித்திருக்கிறார். நார்மல் பேத்தி, பாட்டி இன்சைடு பேத்தி என இரண்டு கதாபாத்திரங்களையும் அழகாக கையாண்டிருக்கிறார். வாழ்த்துக்கள் ஷில்பா. 'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் தான் படத்தின் கதாநாயகன். தனது ரோலை சரியாக செய்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் இன்னும் சிறப்பாக நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

பேரழகி ஐ.எஸ்.ஒ திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

பேரழகி ஐ.எஸ்.ஒ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+