பிச்சைக்காரன் தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படம் இயக்குனர் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க, வர மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி இத்திரைப்படத்தினை தயாரித்துள்ளார்.
கதை :
900 கோடிக்கு அதிபராக வருகிறார் விஜய் ஆண்டனி. தான் உலகமாக நினைக்கும் தன்னுடைய அம்மா ஒரு விபத்தில் கோமா செல்கிறார். அதனை சரி செய்ய ஆங்கில மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம் என அனைத்து வகையான மருத்துவமும் தோல்வி அடைய, அந்நேரத்தில், ஒரு சாமியாரின் அறிவுரை படி 48 நாட்கள் தன்னையும் தன் சொத்தினையும் மறந்து ஒரு பிச்சைக்காரனாக வாழ ஆரம்பிக்கின்றார்.
இந்த 48 நாட்களில் விஜய் ஆண்டனியை அழிக்கவும், அவரின் சொத்துகளை கைப்பற்றவும் பல்வேறு சூழ்ச்சிகள் நடக்கின்றது. அதனை எல்லாம் இவர் எப்படி முறியடிக்கிறார், இவரது பிராத்தனையால், இவரது அம்மா குணமடைந்தாரா? என்பதே விறுவிறுப்பான மீதிக்கதை.