X
தமிழ் » திரைப்படங்கள் » பிச்சைக்காரன்
பிச்சைக்காரன்

பிச்சைக்காரன்

Action | Drama | 04 Mar 2016 | U |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

பிச்சைக்காரன் கதை

பிச்சைக்காரன் தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படம் இயக்குனர் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க, வர மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி இத்திரைப்படத்தினை தயாரித்துள்ளார்.  கதை :   900 கோடிக்கு அதிபராக வருகிறார் விஜய் ஆண்டனி. தான் உலகமாக நினைக்கும் தன்னுடைய அம்மா ஒரு விபத்தில் கோமா செல்கிறார். அதனை சரி செய்ய ஆங்கில மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம் என அனைத்து வகையான மருத்துவமும் தோல்வி அடைய, அந்நேரத்தில், ஒரு சாமியாரின் அறிவுரை படி 48 நாட்கள் தன்னையும் தன் சொத்தினையும் மறந்து ஒரு பிச்சைக்காரனாக வாழ ஆரம்பிக்கின்றார்.  இந்த 48 நாட்களில் விஜய் ஆண்டனியை அழிக்கவும், அவரின் சொத்துகளை கைப்பற்றவும் பல்வேறு சூழ்ச்சிகள் நடக்கின்றது. அதனை எல்லாம் இவர் எப்படி முறியடிக்கிறார், இவரது பிராத்தனையால், இவரது அம்மா குணமடைந்தாரா? என்பதே விறுவிறுப்பான மீதிக்கதை.
Read More

பிச்சைக்காரன் நடிகர்கள் & படக்குழுவினர்

பிச்சைக்காரன் அணியின் தகவல்

இயக்குனர் சசி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை விஜய் ஆண்டனி
தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பிச்சைக்காரன் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
தலைப்பில் சென்டிமென்ட் பார்க்கும் கோடம்பாக்கத்தில் முதல் முறையாக அதை உடைத்து, புதிய ட்ரெண்டை உருவாக்கியிருக்கிறார் விஜய் ஆன்டனி. தலைப்பில் உள்ள இந்த புதுமை படத்தில் தொடர்கிறதா... பார்க்கலாம். கதை...? சொல்ல எளிமையானது. ஆனால் எடுக்க ரொம்பவே சவாலானது. அந்த சவாலை சரியாகவே சமாளித்திருக்கிறார் இயக்குநர் சசியும் அவரது ஹீரோ விஜய் ஆன்டனியும். மேலோட்டமாகப் பார்த்தால் லக்கிமேன் டைப் கதைதான். ஆனால் இந்தக் கதைக்கு இயக்குநர் சசி கொடுத்திருக்கும் ட்ரீட்மென்ட் பாக்யராஜின் புத்திசாலித்தனத்துக்கு இணையானது சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறார்கள். ஆரம்ப காட்சிகளில் ரொம்பவே ஆமை வேகம். விஜய் ஆன்டனியின் உபதேசங்கள், சாமியார் சொல்லும் பரிகாரக் காட்சிகள் எல்லாம் படத்தை வஞ்சிக் கோட்டை வாலிபன் காலத்துக்கு கொண்டுபோவது போன்ற பிரமை. படத்தின் முக்கிய ப்ளஸ் சசியின் வசனங்கள். 'ஏந்தற கைக்கு, ஓங்கற பழக்கம் வராது' ஒரு பருக்கைப் பதம். பெயரில்தான் பிச்சைக்காரன். தரத்தில் கோடீஸ்வரனாக இல்லாவிட்டாலும் லட்சாதிபதியாக நிறைக்கிறான்!

பிச்சைக்காரன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

பிச்சைக்காரன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+