»   »  மோடியால் ஒரே நாளில் சூப்பர் பிரபலமான 'பிச்சைக்காரன்'

மோடியால் ஒரே நாளில் சூப்பர் பிரபலமான 'பிச்சைக்காரன்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மோடியின் பண மதிப்பிழப்பு பிரச்சனையின்போது பிச்சைக்காரன் படத்தில் வந்த ஒரு காட்சி மிகவும் பிரபலமானது.

கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று கூறி பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

Pichaikaran video goes viral again

அந்த அறிவிப்பால் ஏழைகள் பெரிதும் அவதிப்பட்டனர். வங்கியில் மணிக்கணக்கில் நின்று உயிர் இழந்தவர்கள் பலர். ஏடிஎம் வாசல்களில் கால் கடுக்க நின்று இறந்தவர்கள் சிலர்.

மோடியின் அறிவிப்புக்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தில் வந்த ஒரு காட்சி மிகவும் பிரபலமானது. ஒரு பிச்சைக்காரன் இந்தியாவில் வறுமையை ஒழிக்க 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும் என்பார்.

அந்த காட்சி வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பலரும் அந்த வீடியோவை மீண்டும் பார்த்து வருகிறார்கள்.

English summary
A beggar who talks about demonetisation in the movie Pichaikaran is going viral again.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X