twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    100வது நாள் கொண்டாடும் தெலுங்கு பிச்சைக்காரன்- மகிழ்ச்சியில் விஜய் ஆண்டனி

    By Mayura Akilan
    |

    சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் தெலுங்கு சினிமா 100வது நாளை வெற்றிகரமாக எட்டப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழில் வெளியான பிச்சைக்காரன் படமும் வெற்றி படமாக அமைந்தது.

    சசி இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

    Pichaikaran Telugu Version touch 100 Days

    அதன்பின் 50 லட்சம் செலவு செய்து இப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டனர். அங்கேயும் இப்படம் பல கோடிகளை வசூல் செய்து சூப்பர்ஹிட் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

    லாபம் வசூலித்த பிச்சைக்காரன்

    தமிழில் மார்ச் மாதம் 4ம் தேதி வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் 'பிச்சைக்காரன்'. சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சாட்னா டைட்டஸ் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் வசூல் ரீதியாக அனைவருக்கும் லாபத்தைத் தேடிக் கொடுத்தது.

    தெலுங்கில் பிச்சகாடு

    தமிழில் பெரும் வெற்றி பெற்ற 'பிச்சைக்காரன்' திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு 'பிச்சகாடு' என்ற பெயரில் மே மாதம் 13ம் தேதி வெளியானது. படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே படம் பற்றிய விமர்சனங்கள், கருத்துக்கள் படத்திற்கு மிகப் பெரும் விளம்பரத்தைத் தேடிக் கொடுத்தன.

    100வது நாள்

    50 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டு தெலுங்கில் வெளியிடப்பட்ட படம் பல கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழில் 50 நாளைக் கடக்க முடியாத படம் தெலுங்கில் 100 நாளைக் கடந்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

    வெற்றி விழா

    பிச்சகாடு படத்தின் 100வது நாள் விழாவை தெலுங்கில் பிரம்மாண்டமாகக் கொண்டாட படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனியின் அடுத்த தமிழ்ப் படங்களின் தெலுங்கு உரிமைக்கு தற்போது கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    சைத்தான், எமன்

    பிச்சைக்காரன் வெற்றிக்குப் பின் விஜய் ஆண்டனிக்கென தமிழில் ஒரு தனி மார்க்கெட் உருவாகியுள்ளது. அவர் தற்போது 'சைத்தான், எமன்' உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படங்களையும் தெலுங்கு மார்க்கெட்டுக்கு ஏற்றார் போல சில மாற்றங்களை செய்துள்ளாராம் விஜய் ஆண்டனி.

    ஹிட் கொடுத்த விஜய் ஆண்டனி

    தமிழில் தற்போது பெரிய வெற்றிப் படங்கள் கூட நான்கு வாரங்கள் மட்டுமே ஓடி வரும் சூழ்நிலையில் ஒரு தமிழ்ப் படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு இங்கு ஓடிய நாட்களை விட அங்கு அதிக நாட்கள் ஓடுவது ஆச்சரியமான ஒன்று என்று பேசுகின்றனர் கோலிவுட், டோலிவுட் நடிகர்கள்.

    English summary
    Pichaikaran, the Tamil movie directed by Sasi was a sleeper hit in the Kollywood box-office. The Telugu version of this movie was released as "Bichagudu" in Andhra/Telengana region.in the Tollywood theaters, and it is now toches the prestigious 100 day mark.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X