»   »  500, 1000 ரூபாய் ஒழிப்பு: மோடியால் சூப்பர் பிரபலமான 'பிச்சைக்காரன்' சசி என்ன சொல்கிறார்?

500, 1000 ரூபாய் ஒழிப்பு: மோடியால் சூப்பர் பிரபலமான 'பிச்சைக்காரன்' சசி என்ன சொல்கிறார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிச்சைக்காரன் படத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கும் காட்சி வைத்தது பற்றி இயக்குனர் சசி விளக்கம் அளித்துள்ளார்.

கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு பிறருக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம்.

கோலிவுட் ரசிகர்கள் இதே போன்ற காட்சியை ஏற்கனவே பிச்சைக்காரன் படத்தில் பார்த்துவிட்டனர்.

பிச்சைக்காரன்

பிச்சைக்காரன் படத்தில் சாலையோரம் அமர்ந்து பிச்சை எடுக்கும் ஒருவர் இந்தியாவில் ஏழைகளே இல்லாமல் போவதற்கு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும் என்பார்.

சசி

சசி

ஒரு பிச்சைக்காரன் பொருளாதாரம் பற்றி பேசினால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் அவர் பொருளாதாரத்தில் எதை பற்றி பேச வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தேன் என பிச்சைக்காரன் பட இயக்குனர் சசி தெரிவித்துள்ளார்.

நோட்டுகள்

நோட்டுகள்

சார், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிப்பது குறித்து பிச்சைக்காரனை பேச வைத்தால் நன்றாக இருக்கும் என உதவி இயக்குனர் ஒருவர் எனக்கு ஐடியா கொடுத்தார் என்கிறார் சசி.

சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிப்பது குறித்த ஐடியாவை கடந்த 2013ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். அதனால் அதை நாங்கள் காமெடியாக அளித்தோம் என்று சசி தெரிவித்துள்ளார்.

நீக்கம்

நீக்கம்

எடிட்டிங்கின்போது பிச்சைக்காரன் பொருளாதாரம் பற்றி பேசும் காட்சியை நீக்க நினைத்தோம். ஆனால் மக்கள் பிரச்சனை பற்றி பேசும் அந்த காட்சி ரசிகர்களை கவரும் என நினைத்து அதை வைத்துக் கொண்டோம் என சசி கூறியுள்ளார்.

English summary
Pichaikaran director Sasi said that when he was thinking of a scene in which a beggar talks about economics, an assistant director gave him the idea of demonitising Rs. 500, Rs. 1000 notes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil