»   »  இசையமைப்பாளர், நடிகர்.. அடுத்து "டைரக்டர்" விஜய் ஆண்டனி... இந்தியில்!

இசையமைப்பாளர், நடிகர்.. அடுத்து "டைரக்டர்" விஜய் ஆண்டனி... இந்தியில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் இந்தி ரீமேக் மூலம் இயக்குனர் ஆக உள்ளார்.

விஜய் ஆண்டனி 2005-ம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் அறிமுகமானார். அவர் 2012-ம் ஆண்டு நான் என்ற படத்தின் மூலம் ஹீரோவானார். அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் ஹிட் அடித்தது. மேலும் அவர் தேர்வு செய்கின்ற படத்தின் கதைகள் மற்றும் பெயர்கள் கூட வித்தியாசமாக அமைந்தது.


Vijay Antony takes director avatar too

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் அவர் தற்போது நடித்து வரும் எமன், சைத்தான் போன்ற படங்கள் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராகி வருகின்றது.


இந்நிலையில் விஜய் ஆண்டனி இயக்குனராக உள்ளார். பிச்சைக்காரன் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் விஜய் ஆண்டனி. அவரே இயக்கி நடிக்க முடிவு செய்துள்ளார்.


பிச்சைக்காரன் இந்தி ரீமேக்கை பெரிய நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாம்.

English summary
Music director turned actor Vijay Antony will direct a movie in Bollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil