twitter

    பி எம் நரேந்திர மோடி கதை

    பி எம் நரேந்திர மோடி இயக்குனர் ஓமுங் குமார் இயக்கத்தில் விவேக் ஓபராய் நடிக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழக்கையை மைய்யமாக கொண்டு உருவாகும் சுயசரிதை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் ஓபராய் மற்றும் சந்தீப் சிங் இணைந்து தயாரிக்கவுள்ளார்.

    சாதாரண டீ விற்பவராக இருந்த மோடி, இந்தியாவின் பிரதமரானது எப்படி என்று திரையில் பேச இருக்கிறது இந்தப் படம். ஜனவரி 7, 2019-இல் மகாராஷ்டிரா முதல் அமைச்சர் தேவேந்திர ஃபட்னவீஸ் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். 

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 23 இந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தினை தேசிய விருது பெற்ற "மேரி கோமின்" வாழ்க்கை வரலாற்றை கொண்டு உருவான சுயசரிதை திரைப்படத்தின் இயக்குனர் ஓமுங் குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.

    ரிலீஸ்

    இத்திரைப்படம் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதியில் வெளியாகவுள்ளது என்று 2019-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதியில் வெளிவந்த தகவலை தொடர்ந்து, தற்போது உயர்நீதி மன்றத்தின் அனுமதியை பெற்று இத்திரைப்படம் "யு" சான்றிதழுடன் ஏப்ரல் 11-ம் தேதியில் தேர்தலுக்கு முன்னதாகவே வெளிவரவிருந்தது. 

    இந்நிலையில் 2019 மார்ச் 10-ல் இந்திய தேர்தல் ஆணையம் இத்திரைப்படத்தினை வெளியிட தடை செய்துள்ளது. மேலும் இத்திரைப்படமானது 2019-ம் ஆண்டில் நடைபெறும் தேர்தலுக்கு பின்னரே வெளியிடவேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து இத்திரைப்படமானது 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதியில் திரையரங்குகளில் வெளிவந்துள்ளது.
      

    **Note:Hey! Would you like to share the story of the movie பி எம் நரேந்திர மோடி with us? Please send it to us ([email protected]).