புலிக்குத்தி பாண்டி இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து, 2021 பொங்கல் பண்டிகைக்கு நேரடியாக இப்படத்தினை சன் தொலைக்காட்சியிலும், சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் நடிகர் சமுத்திரக்கனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஆர்.கே.சுரேஷ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன் என தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவில் ஒரு அதிரடி மற்றும் குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், 2021 பொங்கல் பண்டிகைக்கு சன் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட 'புலிக்குத்தி பாண்டி' திரைப்படம் ஆன்லைன் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி இணையதள செயலி மூலம் உலகம் முழுவதும் விநியோக செய்யப்பட்டுள்ளது.
புலிக்குத்தி பாண்டி திரைப்படத்தின் கதை
கதைக்கரு: ஞாயத்திற்காக அதிரடி செய்யும் நாயகன் (விக்ரம் பிரபு), இவர் செய்யும் அதிரடியால் மறைமுகமாகவும், நேரடியாகவும் பாதிக்கப்படும் நாயகனின் குடும்பம். இவரை திருத்தி நல்வழிப்படுத்தி அமைதியாக வாழும் நாயகி (லட்சுமி மேனன்). நாயகனை குடும்பத்தோடு பழிவாங்க துடிக்கும் நாயகனின் விரோதிகள். பின் என்ன நடந்து என்பதே திரைப்படம்.
கதை: அதிரடி மற்றும் பஞ்சாயத்து செய்து வரும் சமுத்திரக்கனி, சிலர் அறிமுகத்தில் ஒரு கும்பலுக்கு பஞ்சாயத்து
செய்ய செல்கிறார். அங்கு ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலைக்கு காரணம் சமுத்திரக்கனி என சூழ்ச்சி செய்து இவரை மாட்டிவிடுகின்றனர். இதற்காக சமுத்திரக்கனிக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படுகிறது.
சமுத்திரக்கனியின் மகன் பாண்டி (விக்ரம் பிரபு), அவரை போன்று அதிரடி செய்து வருகிறார். விக்ரம் பிரபு ஒரு நல்ல நோக்கத்தோடு, நல்லவர்களுக்காக அதிரடி செய்கிறார். இவரின் நல்ல பண்புகளை கண்டு காதலிக்கும் நாயகி பேச்சி (லட்சுமி மேனன்). தான் காதலித்த படி நாயகன் விக்ரம் பிரபுவை திருமணம் செய்துக்கொள்கிறார்.
திருமணத்திற்கு பின்னர் விக்ரம் பிரபுவை நல்வழிப்படுத்தி குடும்பத்தோடு அமைதியாக வாழ்கிறார், லட்சுமி மேனன். ஆனால் விக்ரம் பிரபுவின் விரோதிகள் இவரை பழிவாங்க துரத்துகின்றனர். ஒரு கட்டத்தில் எதிரிகள் விக்ரம் பிரபுவை சூழ்ச்சி மூலம் கொலை செய்கின்றனர். பின்னர் என்ன நடந்து என்பதே இப்படத்தின் சுவாரஸ்யமுள்ள திரைக்கதை.