இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் (ரா ரா) இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது '2டி என்டேர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கும் சமூக கருத்துக்கள் உள்ளடக்கிய ஜனரஞ்சகமான குடும்ப திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் க்ரிஷ் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் நேரடியாக ஆன்லைன் ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோ செயலியில் 2021 செப்டம்பர் 24ல் வெளியாகியுள்ளது.
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தின் கதை
கதை: மாட்ட காணாம்னு கேஸ் கொடுக்கப் போன இடத்தில் நடக்கும் அரசியலை தெள்ளத் தெளிவாக இந்த திரைப்படம் காட்டியுள்ளது. மாட்ட காணாம்னு கேஸ் குடுத்து அந்த கேஸ் மூலம் நடக்கும் பின்விளைவுகள் தான் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தின் ஒன் லைன். இரண்டு மாடுகளை தான் பெற்ற பிள்ளைகள் போல் பாதுகாப்புடன் பாசத்துடன் வளர்த்து அவைகளை சீராட்டி பாராட்டி கொஞ்சிக் குலாவி விளையாடும் ஒரு தம்பதியரின் பற்றிய கதை. இந்த கதையில் வெள்ளையன் கருப்பன் எனும் அந்த இரண்டு குழந்தைகள் ( மாடுகள் ) காணாமல் போக அது அரசியல் கதையாக எப்படி மாறுகிறது என்பதை இயக்குனர் திரைக்கதை மூலம் சொல்லி உள்ளார்.