ரெய்டு - அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா, ரிஷி ரித்விக் என பலர் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் கன்னட சினிமாவில் ஷிவ் ராஜ்குமார் நடிப்பில் வெளியான 'தகரு' படத்தின் தமிழ் ரீமேக் படமாகும்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கதிரவன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் மணிமாறன் எடிட்டிங் செய்துள்ளார். ரெய்டு திரைப்படம் 2023 தீபாவளி பண்டிகை முன்னிட்டு திரையில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
ரெய்டு படத்தின் கதை
நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் விக்ரம் பிரபு, சில ரௌடிகளால் தனது மனைவி ஸ்ரீதிவ்யா-வை இழக்கிறார். மீண்டும் ஸ்ரீதிவ்யாவின் தங்கையை ரௌடிகள் குறிவைத்துள்ளனர் என அறியும் விக்ரம் பிரபு தனது குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார், என்பதே படத்தின் கதை.