ராஜா ரங்குஸ்கி இயக்குனர் தரணீதரன் இயக்கத்தில், மெட்ரோ சிரிஷ், சாந்தினி தமிழரசன், அனுபமா குமார் மற்றும் பலர் நடித்த அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் தரணீதரன் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
கதை :
காவல்துறையில் ஒரு சாதாரண காவலராக வேலை பார்க்கிறார் ராஜா (மெட்ரோ சிரிஷ்). தனியாக வசித்து வரும் முதியவர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது இவரது வேலை. அப்படி தனியாக வசித்து வரும் மரியாவின் (அனுபமா குமார்) வில்லாவுக்கு செல்லும் போது எழுத்தாளரான ரங்குஸ்கியை (சாந்தினி) காதலிக்க தொடங்குகிறார். ரங்குஸ்கிக்கு தன் மீது காதல் வர வைப்பதற்காக ராஜா செய்யும் வேலைகள் அவருக்கே வினையாகிறது. இந்நிலையில் மரியா மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். ராஜா மீது கொலை பழி விழுகிறது. உண்மையில் மரியாவை கொன்றது யார் என்ற கேள்விக்கு விடை தேடுகிறது படம்.