X
தமிழ் » திரைப்படங்கள் » ராஜா ரங்குஸ்கி
ராஜா ரங்குஸ்கி

ராஜா ரங்குஸ்கி

Action | 21 Sep 2018 |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

ராஜா ரங்குஸ்கி கதை

ராஜா ரங்குஸ்கி இயக்குனர் தரணீதரன் இயக்கத்தில், மெட்ரோ சிரிஷ், சாந்தினி தமிழரசன், அனுபமா குமார் மற்றும் பலர் நடித்த அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் தரணீதரன் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  கதை : காவல்துறையில் ஒரு சாதாரண காவலராக வேலை பார்க்கிறார் ராஜா (மெட்ரோ சிரிஷ்). தனியாக வசித்து வரும் முதியவர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது இவரது வேலை. அப்படி தனியாக வசித்து வரும் மரியாவின் (அனுபமா குமார்) வில்லாவுக்கு செல்லும் போது எழுத்தாளரான ரங்குஸ்கியை (சாந்தினி) காதலிக்க தொடங்குகிறார். ரங்குஸ்கிக்கு தன் மீது காதல் வர வைப்பதற்காக ராஜா செய்யும் வேலைகள் அவருக்கே வினையாகிறது. இந்நிலையில் மரியா மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். ராஜா மீது கொலை பழி விழுகிறது. உண்மையில் மரியாவை கொன்றது யார் என்ற கேள்விக்கு விடை தேடுகிறது படம்.
Read More

ராஜா ரங்குஸ்கி நடிகர்கள் & படக்குழுவினர்

ராஜா ரங்குஸ்கி அணியின் தகவல்

இயக்குனர் தரணிதரன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பாளர் தரணிதரன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ராஜா ரங்குஸ்கி விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
ஒரு த்ரில்லர் திரைப்படத்துக்கு தேவையான திரைக்கதையை பக்காவாக அமைத்திருக்கிறார் இயக்குனர் தரணிதரன். யார் கொலையாளி என்பதை பார்வையாளர்கள் யூகித்துவிடக்கூடாது என்பதற்காக பல டிவிஸ்ட்டுகளை வைத்திருக்கிறார். கதைக்கு தேவையான விஷயங்களை மட்டுமே படத்தில் வைத்திருப்பதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள். முதல் பாதி செம ஷார்ப்பாக இருக்கின்றது. இரண்டாம் பாதியில் வரும் பாடல்கள் படத்தின் வேகத்தை குறைத்து விடுகின்றன. அதேபோல தீவிர சினிமா ரசிகர்கள் இவர் தான் கொலையாளி என்பதை யூகித்துவிடுவார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. போலீஸ் தொடர்பான காட்சிகளில் இன்னும் கூட டீடெயிலிங் செய்திருக்கலாம். பழங்காலத்து கத்தி, உலகின் முதல் பைபிள் அதற்கான சந்தை மதிப்பு என பல புரியாத விசயங்களை பற்றி படம் பேசுகிறது. ஆனால், அதை பாமர மக்களுக்கு புரியும் வகையில் எளிமைப் படுத்தியிருப்பதும் சிறப்பு. படத்தின் மிகப்பெரிய பலம் யுவனின் இசை. 'பட்டுக்குட்டி நீதான்' பாடல் பார்வையாளர்களை படத்துக்குள் கைப்பிடித்து இழுத்து சென்றுவிடுகிறது. சாதாரண காட்சியை கூட வேற லெவலுக்கு எடுத்து செல்கிறது பின்னணி இசை. படம் கொஞ்சம் மெதுவாக நகர்வதால் இரண்டாம் பாதி சிறிது அயர்வை ஏற்படுத்திவிடுகிறது. காமெடிக்கு இன்னும் கூட முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். அதேபோல கொலைக்கான காரணம் ஏற்றுக்கொள்ளும் படியாக இருந்தாலும் லேசாக உறுத்துகிறது.

ராஜா ரங்குஸ்கி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ராஜா ரங்குஸ்கி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+