twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு கொலை.. ஒரு கொலையாளி.. பல மர்ம முடிச்சுகள்.. 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்!

    ஒரு கொலையும் பல மர்ம முடிச்சுகளும் தான் ராஜா ரங்குஸ்கி திரைப்படம்.

    |

    Rating:
    3.0/5
    Star Cast: மெட்ரோ சிரிஷ், சாந்தினி தமிழரசன், அனுபமா குமார்
    Director: தரணிதரன்

    சென்னை: காதலால் கொலைப் பழியில் சிக்கும் நாயகன், அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறான் என்பதை திரில்லிங்காக சொல்லி இருக்கும் படம் தான் ராஜா ரங்குஸ்கி.

    காவல்துறையில் ஒரு சாதாரண காவலராக வேலை பார்க்கிறார் ராஜா (மெட்ரோ சிரிஷ்). தனியாக வசித்து வரும் முதியவர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது இவரது வேலை. அப்படி தனியாக வசித்து வரும் மரியாவின் (அனுபமா குமார்) வில்லாவுக்கு செல்லும் போது எழுத்தாளரான ரங்குஸ்கியை (சாந்தினி) காதலிக்க தொடங்குகிறார். ரங்குஸ்கிக்கு தன் மீது காதல் வர வைப்பதற்காக ராஜா செய்யும் வேலைகள் அவருக்கே வினையாகிறது. இந்நிலையில் மரியா மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். ராஜா மீது கொலை பழி விழுகிறது. உண்மையில் மரியாவை கொன்றது யார் என்ற கேள்விக்கு விடை தேடுகிறது படம்.

    Raja ranguski movie review

    ஒரு த்ரில்லர் திரைப்படத்துக்கு தேவையான திரைக்கதையை பக்காவாக அமைத்திருக்கிறார் இயக்குனர் தரணிதரன். யார் கொலையாளி என்பதை பார்வையாளர்கள் யூகித்துவிடக்கூடாது என்பதற்காக பல டிவிஸ்ட்டுகளை வைத்திருக்கிறார். கதைக்கு தேவையான விஷயங்களை மட்டுமே படத்தில் வைத்திருப்பதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

    முதல் பாதி செம ஷார்ப்பாக இருக்கின்றது. இரண்டாம் பாதியில் வரும் பாடல்கள் படத்தின் வேகத்தை குறைத்து விடுகின்றன. அதேபோல தீவிர சினிமா ரசிகர்கள் இவர் தான் கொலையாளி என்பதை யூகித்துவிடுவார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. போலீஸ் தொடர்பான காட்சிகளில் இன்னும் கூட டீடெயிலிங் செய்திருக்கலாம்.

    Raja ranguski movie review

    பழங்காலத்து கத்தி, உலகின் முதல் பைபிள் அதற்கான சந்தை மதிப்பு என பல புரியாத விசயங்களை பற்றி படம் பேசுகிறது. ஆனால், அதை பாமர மக்களுக்கு புரியும் வகையில் எளிமைப் படுத்தியிருப்பதும் சிறப்பு.

    படத்தின் மிகப்பெரிய பலம் யுவனின் இசை. 'பட்டுக்குட்டி நீதான்' பாடல் பார்வையாளர்களை படத்துக்குள் கைப்பிடித்து இழுத்து சென்றுவிடுகிறது. சாதாரண காட்சியை கூட வேற லெவலுக்கு எடுத்து செல்கிறது பின்னணி இசை.

    Raja ranguski movie review

    படத்தின் மற்றொரு பலம் ஒளிப்பதிவு. யுவாவின் லைட்டிங்கும், கோணங்களும் கதை சொல்லலுக்கு மிகச்சிறந்த உதவியை செய்திருக்கிறது.

    மெட்ரோ படத்தில் நடித்த சிரிஷ்க்கு அதே போன்றதொரு படம் தான் இதுவும். தனது பணியை நிறைவாக செய்திருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாமல், அமைதியாக வந்து அப்ளாஸ் அள்ளுகிறார்.

    Raja ranguski movie review

    படத்தின் சர்ப்ரைஸ் கிப்ஃட் சாந்தினி தான். சின்ன சின்ன கண் அசைவுகளில் கிறங்கடிக்கிறார். சும்மா வந்து போகாமல், சூப்பர் பெர்பாமன்ஸ் தந்திருக்கிறார்.

    கல்லூரி வினோத்திற்கு இப்படத்தில் காமெடி கேரக்டர். கொடுத்த வேலையை ஓரளவுக்கு சரியாக செய்திருக்கிறார். அனுபமா குமார், ஜெயக்குமார் ஜானகிராமன், சத்யா என அனைவருமே தங்கள் கடமையை சரியாக செய்திருக்கிறார்கள். இதில் ஜெயக்குமார் ஜானகிராமன் மட்டும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்.

    படம் கொஞ்சம் மெதுவாக நகர்வதால் இரண்டாம் பாதி சிறிது அயர்வை ஏற்படுத்திவிடுகிறது. காமெடிக்கு இன்னும் கூட முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். அதேபோல கொலைக்கான காரணம் ஏற்றுக்கொள்ளும் படியாக இருந்தாலும் லேசாக உறுத்துகிறது.

    வெகு நாட்களுக்கு பிறகு தமிழில் ஒரு நல்ல த்ரில்லர் திரைப்படம். தவிர்க்காமல் பாருங்க மக்களே.

    English summary
    The murder mystery movie Raja Ranguski, is a very good thriller starring Metro Shirish and Chandini in the lead roles.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X