ரிவால்வர் ரீட்டா
ரிவால்வர் ரீட்டா என்பது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த அதிரடிக் நாடக திரைப்படம். இப்படத்தை JK. சந்துரு இயக்கியுள்ளார். பாஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் தயாரித்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, அஜய் கோஷ், சுனில், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இசையை சீன் ரோல்டன் அமைத்துள்ளார் , ஒளிப்பதிவு தினேஷ் பி. கிருஷ்ணன் மேற்கொண்டார் , எடிட்டிங் பிரவீன் கே. எல். செய்துள்ளார் .
கதை
பாண்டிச்சேரியில் வசிக்கும் ரீட்டா (கீர்த்தி சுரேஷ்) வீட்டில், அந்த ஏரியா ரவுடியான டிராகுலா பாண்டியன் (சூப்பர் சுப்புராயன்) எதிர்பாராத விதமாக இறந்துவிடுகிறார்.
அவரது மகன், அப்பாவை தேடி வருவதோடு, தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை பிடித்து அடக்கத் திட்டமிடுகிறார். தன்னை மற்றும் தனது குடும்பத்தை பாதுகாக்க, ரீட்டா ரிவால்வர் எடுத்துக் கொள்வது உள்ளிட்ட செயல்கள், டார்க் காமெடி ஜானரில் படத்தை சுவாரஸ்யமாக்குகின்றன.
வெளியீட்டு தேதி
ரிவால்வர் ரீட்டா திரைப்படம் 28 நவம்பர் 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகியது.