ராக்கெட்ரி: நம்பி விளைவு கதை

  ராக்கெட்ரி: நம்பி விளைவு - இயக்குனர் ஆனந்த் மஹாதேவன் மற்றும் மாதவன் இணைந்து இயக்கியுள்ள திரைப்படம். இப்படத்தில் மாதவன், சிம்ரன், மோகன் ராமன், கார்த்திக் குமார் என தமிழ் மற்றும் இந்திய திரைப்பட முன்னணி திரை நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர். ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தினை மாதவனின் 'திரி கலர் பிலிம்ஸ்' மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

  இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சர்ஷா ரே ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் பிஜித் பாலா எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் நடிகர் மாதவன் படத்தின் நாயகன், தயாரிப்பாளர், இயக்குனர் என மூன்று துறைகளில் பணியாற்றியுள்ளார்.

  ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்திற்கு தமிழக தணிக்கை குழு 'யு/எ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் தமிழ் - தெலுங்கு - மலையாளம் - கன்னட - ஹிந்தி மொழியில் ஒரு பான் இந்தியா படமாக 2022 ஜூலை 01ல் திரையரங்குகளில் வெளியாகிறது.  ராக்கெட்ரி: நம்பி விளைவு திரைப்படத்தின் கதை

  பெரிய சம்பளத்துக்கு நாசா இவரை வேலைக்கு அழைக்க தனது குருநாதர் விக்ரம் சாராபாயின் கோரிக்கையை ஏற்று இஸ்ரோவில் வேலை பார்க்கிறார் நம்பி நாராயணன் (மாதவன்). விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா அசுர வளர்ச்சியை எட்ட வேண்டிய ஆர்வத்தில் இருக்கும் நேரத்தில் இவரது உழைப்பு அளப்பறியதாக பார்க்கப்படுகிறது. 

  திடவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், திரவ எரிபொருள் (liquid fuel) கொண்டும் ராக்கெட்டை அதிக தூரம் செலுத்த முடியும் என்று சாதித்துக் காட்டிய விஞ்ஞானி, ஒரு கட்டத்தில் விகாஸ் என்ஜினையும் இந்தியாவுக்காக கண்டுபிடிக்கிறார். 

  நாடே அவரை கொண்டாட வேண்டிய நிலையில், அதிரடியாக தேச துரோக வழக்கில் கைது செய்யப்படும் அவர் அதிலிருந்து எப்படி சுய போராட்டம் நடத்தி மீண்டார் என்பது தான் ராக்கெட்ரி படத்தின் கதை.

  ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தின் பிரத்யேக தகவல்கள்

  2001-ம் ஆண்டு பார்த்தாலே பரவசம் திரைப்படத்தில் நடித்த சிம்ரன் மற்றும் மாதவன், பின்பு 2002-ம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தியில் கன்னத்தில் முத்தமிட்டாள் திரைப்படத்திலும் நடித்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ராக்கெட்ரி படத்தின் மூலம் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

  நம்பி நாராயணன் (இஸ்ரோ விஞ்ஞானி), இவர் வாழ்க்கையில் நடந்துள்ள சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தினை இயக்கியுள்ளார், மாதவன். இப்படம் நாராயணன் பிரன்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் ஒரு பட்டதாரி மாணவராக இருந்த நாட்களையும், அவர் மீது தவறான உளவுச் குற்றச்சாட்டுக்கள் பதிந்தத்தைப் பற்றியதாகும்.

  இத்திரைப்படம் 2017-ற்கு முன் தயாரிப்புக்கு முந்தைய வேலைகள் ஆரம்பமான நிலையில், அக்டோபர் 2018ல் திரைப்படத்தின் டீஸர் வெளியானது. ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தினை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் ஓடிடி உரிமையை 'அமேசான் பிரைம் வீடியோ' நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
  **Note:Hey! Would you like to share the story of the movie ராக்கெட்ரி: நம்பி விளைவு with us? Please send it to us (popcorn@oneindia.co.in).